இந்த காரை வாங்கினதுக்கு பேசாம ஒரு கழுதையை வாங்கி இருக்கலாம்! வாடிக்கையாளரின் கோபம்!!

கார் வாங்கி 190 நாட்கள் கூட ஓடவில்லை !! இந்த கார் ஒரு கழுதை கார் !! என்ற வாசகங்கள் அடங்கிய பிளக்ஸ்களை காரில் மாட்டி தொங்கிவிட்டு வாடிக்கையாளர் ஒருவர் சாலையில் பயணம் செய்துள்ளார்.  இது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருவதால் அந்நிறுவனத்திற்கு மோசமான பிரட்சனையாக உருவெடுத்துள்ளது.

தீபக் என்ற வாடிக்கையாளர் கியா நிறுவனத்தின் செல்டோஸ் ஹச்.டி.எக்ஸ் பிளஸ் டீசல் வேரியன்ட் காரை ரூ.19 லட்சம் விலையில் வாங்கினார்.

வாங்கிய புதியதில் நன்றாக ஓடிய கார்  சில மாதங்களுக்கு பிறகு 80 கீ.மீ/மணி வேகத்தில் செல்லும் போது கார் திடீரென நின்றுவிட்டது, பின் சர்வீஸ்-க்கு கொண்டு சென்றிருக்கிறார். அங்கும் இதனை சரிசெய்ய இயலவில்லை, டீலர்ஷிப் ஷோரூம்மை தொடர்பு கொண்டாலும் பதில்  இல்லை.

வாங்கி 10 மாதங்கள் மட்டுமே செல்டோஸ்  காரை, வெறும் 9000 கி.மீ மட்டுமே ஓட்டியுள்ளார். ஆனால் இந்த காரின் வாரன்டி 3 வருடங்கள் மற்றும் வரம்பற்ற கி.மீ. எனவே கார் நிறுவனத்தை தொடர்பு கொண்டு தனது காரை மாற்றித்தரும் படி கேட்டுள்ளார்.

கியா நிறுவனத்திலிருந்து சரியான பதில் வராததால் கடுப்பான வாடிக்கையாளர், கழுதை படங்கள் மற்றும் இந்த காரை 19 லட்சத்திற்கு வாங்கினேன் ஆனால் 190 நாட்கள் கூட ஓடவில்லை, இது ஒரு கழுதை கார் என்ற வாசகங்கள் அச்சடக்கிப்பட்ட பிளக்ஸ்-களை தொங்க விட்டு சாலையில் பயணம் செய்துள்ளார்.

இது நிறுவனத்தின் நற்பெயரை பாதிக்கும் வகையில் வைரலாகி வருவதால் விரைவில் கியா நிறுவனம் பழைய காரை மாற்றி புதிய காரை தரும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்.