2020 வோக்ஸ்வாகன் வெண்டோ பெட்ரோல் BS6 அறிமுகம்
வோக்ஸ்வாகன் நிறுவனம் தனது பி.எஸ் 6 வகை வெண்டோ கார்களை அறிமுகம் செய்துள்ளது.
தற்போதைக்கு பெட்ரோல் என்ஜின் மட்டுமே அறிமுகப்படுத்தபட்டுள்ளது. 998CC, 4 சிலிண்டர் டர்போ சார்ஜர் டைரக்ட் ஃபியுல் இன்ஜக்சன், பெட்ரோல் என்ஜின் 110PS பவரையும் 175NM டார்க்கையும், வெளிப்படுத்தும் திறன் கொண்டது. மேலும் இது 6 ஸ்பீடு மேனுவல் (அ) ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டது. ஏ.ஆர்.ஏ.ஐ-ன் படி இந்த கார் 18.19 கிமீ/லி மைலேஜ் தரும்.
இந்த காரின் டிரான்ஸ்மிஷன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் வகையில் வருகிறது. இதன் பூட் ஸ்பேஸ் 494 லி, பெட்ரோல் டேங்க் கொள்ளளவு 55 லி, முன்புறத்தில் மேக்பர்சன் ஸ்டர்ட் வகை சஸ்பென்ஷனும், பின்புறத்தில் செமி இண்டிபெண்டன்ட் ரெயிலிங் ஆர்ம் வகை சஸ்பென்ஷனும் கொண்டது. இது ஏ.பி.எஸ் பிரேக்கிங் சிஸ்டம் வசதியுடன் முன்புற டயரில் டிஸ்க் பிரேக்கும், பின்புற டயரில் டிரம் வகை பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது. 15 இன்ச் அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

சிறப்பம்சங்கள்:
எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோக்ராம் (ஈ.எஸ்.பி), டிரைவர் மற்றும் பேசஞ்சர் ஏர் பேக்குகள், 5 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட்சிஸ்டம், ஆன்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே, மிரர் லின்க், ப்ளூடூத் ஆகியவற்றின் மூலம் கைபேசியுடன் இணைக்கும் வசதி, குழந்தைகளுக்கான சேஃப்டி லாக்ஸ், பவர் டோர் லாக்ஸ், சீட் பெல்ட் மானிடரிங், முன்புற மற்றும் பின்புறஃபாக் விளக்குகள், ஹெட்லைட்டை அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் வசதி, ரெயின் சென்சிங் பைபார்ஸ், ஏர் கூலிங் மற்றும் ஹீட்டர் வசதி, க்ரூஸ் கன்ட்ரோல் ஆகிய சிறப்பம்சங்கள் உள்ளன.
வேரியண்ட் மற்றும் விலை விபரங்கள்:
1. வெண்ட்டோ 1.0 டி.எஸ்.ஐ பிரண்ட்லைன் – ரூ. 8.86 லட்சம்
2. வெண்டோ 1.0 டி.எஸ்.ஐ கம்போர்ட்லைன் பிளஸ் – ரூ. 9.99 லட்சம்
3. வெண்டோ 1.0 டி.எஸ்.ஐ ஹைலைன் – ரூ. 9.99 லட்சம்
4. வெண்டோ டி.எஸ்.ஐ எடிஷன் – ரூ. 10.99 லட்சம்
5. வெண்டோ 1.0 ஹைலைன்பிளஸ் – ரூ. 11.99 லட்சம்
6. வெண்டோ 1.0 டி.எஸ்.ஐ ஹைலைன் ஏ டி – ரூ. 12.09 லட்சம்
7. வெண்டோ 1.0 டி.எஸ்.ஐ ஹைலைன் பிளஸ் ஏ டி – ரூ. 13.29 லட்சம்
