BS6 மஹிந்திரா எக்ஸ்.யு.வி 500 அறிமுகம்
மஹிந்திரா கார் நிறுவனம் எக்ஸ்.யு.வி 500 மாடலில் பி.எஸ் 6 காம்ளிமென்ட் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இது நான்கு வேரியன்டுகளில் அறிமுகமாகிறது.
இதன் 2.2 லிட்டர் டீசல், 2179 சிசி டைரக்ட் இன்ஜக்சன் என்ஜின் 155 PS பவரையும், 360 NM டார்க்கையும் வெளிப்படுத்தும். இந்த காரில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உள்ளது, இது பழைய ஆட்டோமேட்டிக் ஏ.டபள்யு.டி (ஆல் வீல் டிரைவ்) பதிலாக 2 டபள்யு.டி (2 வீல் டிரைவ்) முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த 7 சீட்டர் கார், ஈ.பி.டி உடன் இணைந்த ஏ.பி.எஸ் பிரேக் சிஸ்டம் கொண்டது. முன்புறத்தில் மேக்பர்சன் ஸ்டர்ட் வகை சஸ்பென்ஷனும், பின்புறத்தில் ஆன்டி ரோல் பார் உடன் கூடிய மல்டி லிங்க் வகை சஸ்பென்ஷனும் கொண்டது. இந்த காருக்கு 5 டோர்ஸ் (கதவுகள்) உள்ளன. டியுப்லெஸ் டயர்களுடன் கூடிய 17 இன்ச் அல்லாய் வீல்கள் உள்ளது. 15.1 கிமீ/லி மைலேஜ் கொடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள்:
7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட்சிஸ்டம், ஆன்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே, மஹிந்திரா ஃபுளூ சென்ஸ் ஆப்ஆகியவற்றின் மூலம் போனுடன் (கைபேசியுடன்) இணைக்கும் வசதி, டிரைவர் சீட்-ஐ 6 வழிகளில் மாற்றியமைக்கும் வசதி, சன்ரூஃப் வசதி,முன்புறத்தில் இரு விபத்து காக்கும் ஏர் பேக்குகள்,பேசஞ்சர் ஏர் பேக்குகள், க்ரூஸ் கன்ட்ரோல், பார்க்கிங் சென்சார்ஸ், முன்புற ஃபாக் விளக்குகள், கிளைமேட் கன்ட்ரோல், ஹெட்லைட்டை அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் வசதி, ரெயின் சென்சிங் பைபார்ஸ், ஏர் கூலிங் மற்றும் ஹீட்டர் வசதி,குழந்தைகளுக்கான சேஃப்டி லாக்ஸ், ஆகிய சிறப்பம்சங்கள் உள்ளன.
வேரியண்ட் மற்றும் விலை(Ex showroom) விபரங்கள்:
- W5 – ரூ. 13.19 லட்சம்
- W7 -ரூ. 14.49 லட்சம்
- W9 -ரூ. 16.19 லட்சம்
- W11(O) -ரூ. 17.19 லட்சம்
