ஆடி கியூ 5 பேஸ்லிப்ட் கார் விரைவில் அறிமுகம்!

ஆடி நிறுவனம் புதிய வசதிகளுடன் ஆடி க்யூ 5 காரை விற்பனை செய்ய தயாராகி வருகிறது.

இந்தியாவில் விற்பனைக்கு வரும் ஆடி க்யூ 5 மாடலில் பி.எஸ் 6 விதிகளின்படி மேம்படுத்தப்பட்ட 2.0 லி TFSI பெட்ரோல் இன்ஜினை கொண்டது. இந்த எஞ்சின் 245 ஹச்.பி பவரையும், 370 என்.எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த எஞ்சின் 7 ஸ்பீடு கொண்ட கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த காரின் முன்பகுதியில் உள்ள கிரில் சிங்கிள் பிரேம் கொண்டு பெரியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த காரின் எல்.இ.டி விளக்குகள் கொண்ட பகல்நேர ரன்னிங் விளக்குகள் தற்போது இருக்கும் மாடல்களை விட சிறப்பாக உள்ளது, டெயில் லைட்டுகள் புதிதாக ஓ.எல்.இ.டி (OLED – Organic LED) கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆடி கியூ 5 ல் பழைய மாடலின் 8.3 இன்ச் டச்-ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை விட அதிக அளவு கொண்ட 10.1 இன்ச் டச்-ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. இந்த இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் முந்திய மாடல்களை விட மிகவும் அதிவேகமாக செயல்படும், மேலும் அமேசான் அலெக்சா தொழில்நுட்பம் கொண்ட வாய்ஸ் அசிஸ்டன்ட் உள்ளது.

கூகுள் எர்த் அப்ளிகேஷன் மூலம் நேவிகேஷன் மிகவும் எளிதாகிறது, வேண்டுமென்றால் மேற்பகுதியில் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை வைத்துக் கொள்ளும் வசதியும் செய்து தரப்படுகிறது.

இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் துவக்கத்தில் ஆடி கியூ 5 விற்பனைக்கு வரலாம் என செய்திகள் வெளிவந்துள்ளன. மேலும் இதன் விலை ரூ.55 லட்சம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.