அம்பாசிடர் கார் மீண்டும் அறிமுகம்!

இந்தியாவில் நீண்ட நாட்கள் உற்பத்தியில் இருந்த கார் மற்றும் இந்திய சாலைகளில் கொடி கட்டி பறந்த கார் ஹிந்துஸ்தான் அம்பாஸிட்டர். இந்த அம்பாசிடர்  கார் புதிய நவீன வடிவத்தில், எலக்ட்ரிக் காராக மீண்டும் விற்பனைக்கு வருவது உறுதியாகிவிட்டது.

இந்தியாவில் உள்ள டி.சி2 என்ற கார் வடிவமைப்பு நிறுவனம் அம்பாஸிட்டர் காரின் எலக்ட்ரிக் மாடலை விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்துவருகிறது.

இந்த காரை வடிவமைப்பதற்கான திட்டத்திற்காக ரூ.120 கோடியை செலவு செய்துள்ளது, இந்த காரில் நவீன தொழில்நுட்பம், வசதிகள் இருக்க வேண்டும், அதே சமயத்தில் பழைய அம்பாஸிட்டரின் அனைத்து அம்சங்களையும் கொண்டதாக இருக்க வேண்டும் என்பதை இலக்காக்கொண்டு 20 மாதங்கள் கடின உழைப்பால் இந்த கார் இறுதி வடிவம் பெற்றது.

இந்த எலக்ட்ரிக் மாடலின் பெயர் இ-ஆம்பி, 2022-ம் ஆண்டிற்குள் விற்பனையை தொடங்கும் என செய்திகள் வெளிவந்துள்ளன.

இந்த மாடலில் 160 கி.வாட்/மணி பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது, எனவே இந்த கார் முழு சார்ஜில் 190-200 கி.மீ தூரம் பயணிக்கும்.

டச்-ஸ்கீரின் கன்ட்ரோல், பின் சீட்டில் உள்ளவர்களுக்காக 10 இன்ச் ஸ்கீரின், மடக்கி நீட்டும் வசதி கொண்ட சிறிய மேசை, குளிரூட்டி மற்றும் ஏறாளமான வசதிகள் இந்த காரில் உள்ளன.

இந்த இ-ஆம்பி எலக்ட்ரிக் கார் ரூ40 – 45 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் டி.சி2 நிறுவனம் இந்த மாடலை அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் விற்பனை செய்யவும் திட்டமிட்டுள்ளது.