2016 INTERMOT – சுஸுகி GSX R 125 அறிமுகம்!!
சுஸுகி, GSX-R 125 மாடலை 2016 INTERMOT ஷோவில் அறிமுகம் செய்து ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த புது எடிசன் ஆசியா மற்றும் ஐரோப்பாவில் விரைவில் விற்பனைக்கு வரலாம் என தெரிகிறது.
தற்போது இந்தியாவில் விற்பனையில் சக்கைபோடு போட்டு வரும் கிக்ஸர் மாடலை தொடர்ந்து இந்த மாடலும் இலகு எடை ஸ்போர்ட்ஸ் பைக் ரகத்தில் நல்ல வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. GSX-R 1000 மாடலை போன்றே முகப்பில் கூர்மையான வரிகளுடன் எல்இடி விளக்குகள் மற்றும் பின்புறம் எல்இடி விளக்குகளுடன் எக்ஸாஸ்ட் கவரும் பொருத்தப்பட்டிருப்பது நிச்சயம் இளைஞர்களை கவரும்.
You may also like this : சுஸுகி கிக்ஸர் 250 விரைவில்!!
சுஸுகி GSX-R 125 கீலெஸ் எண்ட்ரி வசதியுடன் வண்டியை அடையாளம் காணும் பொருட்டு விளக்குகள் ஒளிரும் என்பது கூடுதல் சிறப்பு. என்ஜின் பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. அதே DHOC சிங்கிள் சிலிண்டர் என்ஜின் பயன்படுத்தப்படலாம் எனத் தெரிகிறது.

முன்புறம் மற்றும் பின்புறம் பேட்டல் டிஸ்க் பிரேக்குடன் எபிஎஸ் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. சுஸுகி GSX-R 125 ஐரோப்பிய சந்தையில் KTM RC 125 மற்றும் YZF-R125 ஆகிய மாடல்களுடன் நேரடியாக போட்டியை எதிர்கொள்ளும். அதே சமயம் இந்தியாவில் ஏற்கனவே சுஸுகி கிக்ஸர் SP மற்றும் சுஸுகி கிக்ஸர் SF மாடல்கள் விற்பனையில் இருக்கும் நிலையில் GSX-R 125 வருவது சந்தேகமே என்று கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.
You may also like this : சுஸுகி கிக்ஸர் SP மற்றும் SF வேரியன்ட்டுகள் இந்தியாவில் அறிமுகம்!!!
