2016 INTERMOT – 2017 கவாஸகி நின்ஜா 650 அறிமுகம்!

கவாஸகி நிறுவனம் தற்போது ஜெர்மனியில் நடைபெற்று வரும் ஷோவில் 2017 கவாஸகி நின்ஜா 650 மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே கவாஸகி நின்ஜா H2 மற்றும் நின்ஜா H2 கார்பன் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் அடுத்து 2017 கவாஸகி நின்ஜா 650 அறிமுகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த 2017 நின்ஜா 650 காஸ்மெடிக் மாற்றங்களுடன் சில தொழில்நுட்ப மாற்றங்களையும் பெற்றுள்ளது. அதே போல் எடையும் பழைய மாடலை விட 19 கிலோ குறைந்துள்ளது. மேலும் முகப்பு விளக்கும் நின்ஜா ZX 10R மாடலை போன்று இரட்டை ஸ்ப்லிட் விளக்குகள் பொறுத்தப்பட்டிருப்பது எடுப்பான தோற்றத்தை கொடுகின்றது. எக்ஸாஸ்டரில் எந்த மாற்றமுமில்லாமல் அடிப்புறத்திலேயே தொடர்கிறது. இருக்கை மட்டும் ஸ்ப்லிட் ஸீட் ஆக மாற்றப்பட்டுள்ளது.

2017-kawasaki-ninja-650-intermot-yenthiran

மற்றொரு முக்கியமான அப்டேட்டாக 2017 கவாஸகி நின்ஜா 650 வின் பழைய சேஸிஸ் முழுவதுமாக மற்றப்பட்டு புதிய மல்டி ட்யூப்ளர் அலுமினியம் சேஸிஸ் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் ட்ரெல்லிஸ் ப்ரேம் மேம்படுத்தப்பட்டு மொத்த எடை 15 கிலோவாக குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சிறந்த கையாளுமையை பெற முடியும் என கவாஸகி அறிவித்துள்ளது.

You may also like this : INTERMOT 2016

என்ஜினில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதே சமயம் இந்த பேரலல் ட்வின் மோட்டார் என்ஜின் யூரோ 4 மாசுக்கட்டுப்பாட்டு விதிகளின் படி கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நிசின் மற்றும் போஸ் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட 9.1 ABS பிரேக்கிங் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

2016-intermot-2017-kawasaki-ninja-650

2017 கவாஸகி நின்ஜா 650 எடிசன் மூன்று வண்ணங்களில்(Metallic Spark Black, Blizzard Pearl White and Candy Burnt Orange) கிடைக்கிறது. இந்தியாவில் 2017 மத்தியில் அறிமுகப்படுத்தப்படலாம் என்றும் சிறிய விலை மற்றத்துடன் இந்தியாவில் விற்பனைக்கு வரலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

You may also like this : 2016 INTERMOT – இதோ 2017 கவாஸகி நின்ஜா H2!