டயர் பிரஷர் மானிட்டரிங் அமைப்பை காரில் பொருத்துவது எப்படி ?

கார் நல்ல மைலேஜ் தருவதற்கும், காரை நல்ல நிலையில் வைத்திருப்பதற்கும் டயர்களின் (காற்று அழுத்தம்) பிரஷரை சரியான அளவில் வைத்திருப்பது அவசியம்.

டயர் பிரஷர் மானிட்டரிங் இல்லாத கார்களில் அவற்றை எப்படி பொருத்துவது என்று இந்த பதிவில் காணலாம். டயர் பிரஷர் மானிட்டரிங் கருவிகள் தனியாக கிடைக்கின்றன அவற்றை வாங்கிப் பொருத்துவது மிகவும் எளிதானது. இதனால் டயரின் பிரஷரை நம்மால் பார்க்க முடியும். டயர் பிரஷரில் மாற்றம் இருந்தால் உடனுக்குடன் அதை கவனித்து சரி செய்ய முடியும்.

இரண்டு வகைகள் காரின் டயர் பிரஷரை பார்க்க முடியும்.

1.டயர் மானிட்டரிங் அமைப்பு

2.டிஜிட்டல், டிஜிட்டல் அல்லாத டயர் பிரஷர் மீட்டர்

Read : அதிக மைலேஜ் தரும் டாப் 5 – BS6 டீசல் கார்கள்

பிரஷர் மீட்டரை கொண்டு அளவுகளை பார்க்க ஒவ்வொரு டயரின் காற்று வால்வில் மீட்டரை வைத்து சோதித்துப் பார்க்க வேண்டும். இதற்கு சிறிது நேரம் தேவைப்படும்.

ஆனால் டயர் மானிட்டரிங் அமைப்பை காரில் பொருத்துவதன் மூலம் ஆட்டோமேட்டிக்காக டயரின் பிரஷர் நமக்கு தெரிந்துவிடும் டயரில் காற்றின் அளவு குறைந்தால் உடனே இந்த அமைப்பு நமக்கு தெரிவித்து விடும். இந்த அமைப்பு ஆன்லைன் அல்லது கடைகளில் கிடைக்கிறது.

டயர் பிரஷர் மானிட்டரிங் அமைப்பை காரில் பொருத்துதல் :

கருவிகள்: டயர் பிரஷர் சென்சார்கள் – 4, அளவு காட்டி (மானிட்டர்)

படி 1:

டயர் பிரஷர் சென்சார்கள் சிறிய பேட்டரிகள் மூலம் இயங்கும். எனவே பேட்டரிகளை பொருத்திவிட்டு , காரின் 4 டயர்களிலும் உள்ள வால்வுகளில் இந்த பிரஷர் சென்சார்களை பொருத்தவும்.

 

படி 2:

மானிட்டரை காருக்குள் தேவையான இடத்தில் பொருத்த வேண்டும். இதற்கு யூ.எஸ்.பி மூலம் பவர் தரவேண்டும் அல்லது சூரிய (சோலார்) சக்தி கொண்டு இயங்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

படி3:

மானிட்டரை ஆன் செய்தவுடன் அனைத்து சென்சார்களும் இணைந்து விடும்.

காரின் டயர் பிரஷரை மானிட்டரில் காண்பிக்கும். பிறகு அதில் காரின் பரிந்துரைக்கப்பட்ட டயர் பிரஷரை உள்ளீடு செய்து பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு செய்து விட்டால் கார் டயரின் காற்று அளவு குறையும் பொழுது தானாக எச்சரிக்கை ஒலி எழுப்பும் இதனை வைத்து கார் டயர் பிரஷரை நாம் சரி செய்து கொள்ளலாம்.

 

Also Read: காரில் நல்ல மைலேஜ் கிடைக்கலயா? இந்தப் பிரச்சனையா இருக்கலாம்!