கார் வாங்கப் போறீங்களா? அப்போ உங்க ராசிக்கு ஏற்ற கலர் என்னன்னு தெரிஞ்சுக்கங்க..
வாகனங்களுக்கான வண்ணங்களை தேர்வு செய்வது அவரவர் சொந்த விருப்பம் என்றாலும் சில நேரங்களில் ராசி பலன்களை பொறுத்து வண்ணத் தேர்வில் நன்மையும் சில சமயங்களில் சங்கடங்களும் நடக்கலாம் என்கிறது ஜாதகம் உலகம்.
சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் பெரும்பாலானோர் ராசிபலன் பார்ப்பதில்லை என்றாலும் சில விஷயங்கள், எடுத்துக்காட்டாக கலரை தேர்வு செய்வது, நம்பர் தேர்வு செய்வது, வாகனம் வாங்க உகந்த நாள், எந்த கோயிலில் முதல் பூஜை செய்யலாம் என எல்லாவற்றிற்கும் நம்மில் பலரும் ஜாதகம் பார்க்கத்தான் செய்கிறோம்.
இப்போது வண்டி வாங்க நல்ல நாள், நல்ல நேரம் எது என்று பார்ப்பதற்கு முன்னால் ஒருவரின் வாகன யோகத்தை அவரது ராசி நட்சத்திரங்களும் இலக்கணங்களும் எப்படி தீர்மானிக்கின்றன என்பதையும் பார்ப்போம்.
புது பைக் வாங்க போறீங்களா ? இதோ உங்களுக்கான செக்லிஸ்ட் !!
வாகன யோகத்திற்கு அதிபதி சுக்கிரன். சுக்கிரன் நான்காம் கட்டத்தில் உள்ள ஒருவர்(இப்போதைய நிலைக்கு ஒன்பது கிரகங்களும் உச்சம் பெற்ற ஒருவர்!!:)) வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கிறது ஜாதக கணிப்பு.
பொதுவாக ராகுவும் கேதுவும் வாகன விபத்துகளை ஏற்படுத்தக்கூடியவை, இருப்பினும் இது ஒவ்வொருவருடைய பிறந்த நாள், இடம், நட்சத்திரம், இலக்கணங்களில் அமைப்பை கொண்டு மட்டுமே மிகத் துல்லியமாக கணிக்க முடியும்.
கலர் தேர்வு
ஒருவரின் பிறந்த நேரத்தில் சந்திர திசை எவ்வாறு உள்ளது என்பதை பொறுத்து அவரது ராசிக்கு ஏற்ற வண்ணம் என்ன என்பது கணிக்கப்படுகிறது.
பின்வரும் அட்டவணையில் ஒவ்வொரு ராசிக்கு ஏற்ற வண்ணங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்
| ராசி | உகந்த நிறம் |
| மேஷம் | சிவப்பு, மஞ்சள்,குங்குமப்பூ |
| ரிஷபம் | வெள்ளை, பச்சை, கருப்பு |
| மிதுனம் | சிவப்பு,இளம்பச்சை, சாம்பல் நிறம் |
| கடகம் | வெள்ளை,சிவப்பு,மஞ்சள் |
| சிம்மம் | சிவப்பு,மஞ்சள்,குங்குமப்பூ,வெள்ளை |
| கன்னி | சிவப்பு,இளம்பச்சை, சாம்பல் நிறம் |
| துலாம் | வெள்ளை,பச்சை,கருப்பு |
| விருச்சிகம் | சிவப்பு,மஞ்சள்,குங்குமப்பூ |
| தனுசு | சிவப்பு,மஞ்சள்,குங்குமப்பூ,வெண்கல நிறம் |
| மகரம் | நீலம்,பச்சை,மஞ்சள் |
| கும்பம் | நீலம்,பச்சை,மஞ்சள் |
| மீனம் | சிவப்பு,மஞ்சள்,குங்குமப்பூ,வெண்கல நிறம் |
உங்கள் ராசிக்கான ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர் அடுத்த பதிவில்….
You may also like this :
