க்விட் ஏஎம்டி மாடலின் டீஸர் வெளியானது!!

க்விட்டின் இரண்டு வேரியண்டுகளிலும் இரு ஆட்டோமேடிக் ட்ரைவிங் மோட் அப்சனுடன் ஏஎம்டி வேரியன்டுகள் அறிமுகமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரெனோ நிறுவனம் தனது பெஸ்ட் செல்லரான க்விட் மாடலின் 1 லிட்டர் வேரியன்டை சமீபத்தில் அறிமுகம் செய்தது. க்விட் 1.௦ நல்ல வரவேற்பை பெற்றுள்ளதோடு சிறப்பான விற்பனை பங்களிப்பையும் கொடுத்து வருகிறது. தற்போது ஏற்கனவே அறிவித்த படி ஆட்டோமேடிக் மாடலை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது.

renault-kwid-1-0-yenthiran

இந்நிலையில் ரெனோ நிறுவனம் க்விட்டின் முதல் டீஸரை வெளியிட்டுள்ளது. இந்த ஆட்டோமேட்டட் மேனுவல் ட்ரான்ஸ்மிஸ்சன் ஐந்து ஸ்பீட் கியர்பாக்ஸ் அமைப்பை அடிப்படையாக கொண்டிருக்கும் எனவும் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்சன் வழங்கப்படாது எனவும் கூறப்படுகிறது.

க்விட் ஏஎம்டி மாடல் அதே ௦.8 மற்றும் 1.௦ லிட்டர் என்ஜின்களுடன் முறையே 54பிஎஸ் மற்றும் 68பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும். கையாளுமை கொஞ்சம் கூடகுறைய இருந்தாலும் மேனுவல் ட்ரான்ஸ்மிசன் மாடல்களை விட நிச்சயம் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

renault-kwid-1-0-amt-easy-r-gear-shift

ட்ரான்ஸ்மிசன் தவிர, அதே எஸ்யூவி தோற்றம், டிஜிடல் தொடுதிரை, முன்புறம் பவர் விண்டோஸ், டிஜிடல் ஸ்பீடோ மீட்டர் போன்றவை எந்த மாற்றமும் இல்லாமல் வரலாம். ஆனால் க்விட் ஏஎம்டி மாடல் இந்த முறையாவது ஏபிஎஸ் வசதியுடன் கொடுக்கப்பட வேண்டும் என்பது அனைவரும் எதிர்பார்க்கும் முக்கிய விசயம்.

புதிய ஏஎம்டி மாடல் குறைந்தது 50௦௦௦ முதல் 100000 லட்சம் வரையிலான விலை உயர்வுடன் 4 லட்சம் முதல் 4.5லட்சம்(எக்ஸ் ஷோரூம்) விலையில் வரலாம் என எதிர்பார்க்கபடுகிறது.