டிவிஎஸ் வடிக்கையாளர்களுக்கான பிரத்தியேக மொபைல் அப்ளிகேஷன் அறிமுகம் !
டிவிஎஸ் IRIDE அப்ளிகேஷன் பல்வேறு அலகுகளின் மூலம் உங்கள் பயணத்தை எளிமையானதாகவும் பாதுகாப்பாகவும் மற்ற உதவும்.
இந்த அப்ளிகேஷன் உதவியுடன் உங்களது வாகனத்திற்கான விற்பனைக்கு பிந்திய சேவை, வாகனத்தின் இருப்பிடம் போன்றவற்றை எளிதாக பெற முடியும் .IRIDE அப்ளிகேஷன் Vehicle Identification Number மூலம் வாகனத்தை பதிவு செய்து கொள்ள முடியும். மேலும் இது காலநிலையை பொறுத்து பாதுகாப்பு ஆலோசனையும் அளிக்கிறது.

– வாகனத்தின் இயக்கம் மற்றும் இருப்பிடம் போன்றவற்றை துல்லியமாக தெரியப்படுத்தும்.
– பயணித்த உட்சபட்ச வேகம், தூரம் மைலேஜ் போன்ற தகவல்களை பேஸ்புக்கில் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
– முதலுதவிகள் பற்றிய தகவல்கள் மற்றும் வழிகாட்டி வீடியோக்களை உபயோகப்படுத்தி கொள்ள முடியும்.
– மேலும் சர்வீஸ் சம்பத்தப்பட்ட விவரங்களை ரிமைண்டர்களாக பெறமுடியும்.
TVS வாடிக்கையாளர்கள் முயற்சி செய்து பார்க்கலாம்.
