மும்பை ஏர்போர்ட்டில் புதிய ஹார்லி டேவிட்சன் ஸ்டோர்!!!
ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்தியாவில் முதல் மர்ச்சன்டைஸ் ஸ்டோரை மும்பை ஏர்போர்ட்டில் திறந்துள்ளது.
மேக் 1 ஹார்லி டேவிட்சன் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்டோர் மும்பை விமான நிலையத்தில் இரண்டாவது டெர்மினலில் 500 சதுர அடி பரப்பளவில் பிரம்மான்டமாக அமைந்துள்ளது. பரிசுப்பொருட்கள் மற்றும் பிராண்டட் ஆக்ஸசரீஸ்கள் ஆகியவை விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க பைக் மேக்கரான ஹார்லி டேவிட்சன் தனது பிராண்டை மக்களிடம் எளிதாக கொண்டு சேர்க்கும் விதமாக இது போன்ற ஸ்டோர்களை உலகம் முழுவதும் நிறுவ திட்டமிட்டுள்ளது. மேலும் ஹார்லி டேவிட்சனின் லைஃப் ஸ்டைல் புராடக்ட்களுக்கு உலகம் முழுவதும் வரவேற்பும் பெரிய ரசிகர் பட்டாளமும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஹார்லி டேவிட்சன் இந்தியாவில் 22 நகரங்களில் விற்பனை மையங்களை கொண்டுள்ளதன் மூலம் ப்ரீமியம் பிராண்டுகளிலேயே அதிக எண்ணிக்கையிலான ஷோரூம் மற்றும் சர்விஸ் நெட்வொர்க்குகளுடன் திகழ்கிறது. இந்த வருடத்தில் மட்டும் கோவை, கொச்சி, லக்னோ மற்றும் கோழிக்கோடு போன்ற இரண்டாம் நிலை நகரங்களில் ஷோரூம்களை திறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
