மஸ்டாங் காரின் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்திய ஃபோர்டு!!
ஃபோர்டு நிறுவனம் போட்டியை சமாளிக்க தனது மஸ்டாங் காரின் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது.
இது வரையில் டோட்ஜ் சார்ஜர் மற்றும் செவர்லே கேமரோ ஆகிய மாடல்களின் போட்டியை மிக எளிதாக சமாளித்து விற்பனையில் முன்னிலையில் இருந்து வந்த மஸ்டாங் முதல் முறையாக போட்டியாளர்களின் வேகத்திற்கு பணிந்துள்ளது.
ஃபோர்டு மஸ்டாங் 1965 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு உலக அளவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டது. அமெரிக்காவில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த ஃபோர்டு மஸ்டாங், உலகளவில் கிடைத்த வரவேற்பையடுத்து ஆறாவது தலைமுறை மாடலை வலதுகை ஸ்டீரிங் அமைப்புடன் கூடிய நாடுகளில் அறிமுகப்படுத்தியது. அதில் இந்தியாவும் ஒன்றாக இணைந்தது.
ஆனால் தற்போதைய தலைமுறை(ஆறாவது தலைமுறை) மஸ்டாங் மாடலில் பழைய திடகாத்திரமும் முரட்டுதனமான தோற்றமும் இல்லை என்பது பெரும்பாலான வாடிக்கையாளர்களின் கருத்தாக உள்ளது. இந்த எண்ணவோட்டம் விற்பனையிலும் பிரதிபலித்துள்ளது. தனது பரம வைரியான செவர்லே கேமரோ மாடலிடம் தனது இடத்தை இழந்துள்ளது. இதனால் விற்பனையாகாமல் போதுமான இருப்பு உள்ளதால் உற்பத்தியை நிறுத்தியுள்ளது.
இந்தியாவில் ஃபோர்டு மஸ்டாங், 5.0-லிட்டர் V-8 TiVCT என்ஜின் 401பிஎஸ் பவரையும், 515என்எம் டார்க்கையும் வாரி வழங்கும் வல்லமை என்ஜினுடன் விற்பனையாகிறது. 6 ஸ்பீட் ஆட்டோ ட்ரான்ஸ்மினுடன் பிரன்ட் வீல் ட்ரைவ் ஸிஸ்டம் கொண்டது. அமெரிக்காவில் அதிக எண்ணிக்கையிலான உற்பத்தி பிரச்சினை இருந்தாலும் இந்தியாவில் காத்திருப்பு காலம் எந்த பெரிய மாற்றமும் இல்லாமல் 4 முதல் மாதங்களாக தொடர்கிறது.
