மேற்கு வங்கத்தில் 22 வது டீலர்ஷிப்பை திறந்த DSK பெனல்லி!

DSK பென்ல்லி கூட்டணி தற்போது சிலுகிரியில் தனது 22வது டீலர்ஷிப் ஷோரூமை திறந்துள்ளது.

இரு வாரங்களுக்கு முன்பு 4 ஷோரூம்களை திறந்துள்ள நிலையில் தற்போது மேற்கு வங்கத்தில் சிலுகிரி பகுதியில் ஷோரூமை திறந்துள்ளது. மேலும் இம்முறை மோகன் மோட்டார் சர்விஸ் நிறுவனத்துடன் இணைந்து துவங்கப்பட்டுள்ளது.

இங்குள்ள ஊழியர்களுக்கு தனிப்பட்ட முறையில் சேல்ஸ், சர்விஸ், ஸ்பேர் பார்ட்ஸ் மற்றும் வாடிக்கையாளர் சேவை போன்ற அனைத்து துறைகளுக்கும் பிரத்தியேக பயிற்சியளிக்கப்பட்டுள்ளது.

மேலும் DSK பெனல்லி நாடு முழுவதும் துரிதமான முறையில் சேல்ஸ் மற்றும் சர்விஸ் மற்றும் உதிரிப்பாக கையிருப்பு போன்றவற்றை சிறப்பாக கையாள திட்டமிட்டுள்ளது. 24*7 மணிநேர பிரேக்டவுன் சேவை மற்றும் விற்பனைக்கு பிந்தைய சர்விஸ் ஆகியவையும் இதில் அடக்கம்.

புதிய விலைப்பட்டியல் இதோ!

ரகங்கள் விலை(ரூபாயில்)
TNT 23 1.8 லட்சம்
TNT 300 3.11 லட்சம்
TNT 600i ABS 5.89 லட்சம்
TNT 600 GT 6.17 லட்சம்
TNT 899 9.79 லட்சம்
TNT R 12.19 லட்சம்