2001 ஆண்டுக்கு முந்தைய பழைய வாகனங்களை பட்டியலிட்டு தூக்கும் டெல்லி அரசு!

கடந்த ஒரு வார காலமாக மிக மோசமாக காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள டெல்லி அரசு தற்போது அதிரடியாக களத்தில் குதித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி கிட்டத்தட்ட 2 லட்சம் வாகனங்கள் இப்பட்டியலில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாசுக்கட்டுப்பாடு பிரச்சனையின் காரணமாக டெல்லி முழுவதும் பள்ளிகளுக்கு மூன்று நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே போல் கட்டம் கட்டுதல், இடித்தல் என அனைத்து கட்டுமான பணிகளுக்கும் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் டெல்லியை சுற்றியுள்ள பவர் பிளான்டுகள், மெட்ரோ கட்டுமான சேவை போன்றவையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே டெல்லி அரசு பழைய வாகனங்களுக்கு தடை விதிப்பதை நடைமுறைக்கு கொண்டு வந்துவிட்ட நிலையில் தற்போது அவசர கதியில் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.