இப்படில்லாம் கார் ஓட்டினா செலவு கன்ஃபார்ம்!!

இந்தியாவில் ஆட்டோமேட்டிக் கார்களுக்கான வரவேற்பு சமீபகாலமாக குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்தாலும் மேனுவல் கார்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் எப்போதும் உண்டு.

மேனுவல் கார்களை ஓட்டும் பொழுது நம்  செய்யும் சிறு சிறு தவறுகள் குறிப்பாக கிளட்ச் உபயோகிப்பது சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் கார் என்ஜின் வாழ்நாளை கணிசமாக குறைத்துவிடும்.

கீழ்க்கண்ட இந்த ஐந்து பழக்கங்களை தவிர்த்தால் உங்க கிளட்ச் அமைப்பின் வாழ்நிலை அதிகரிக்கலாம்.

எஞ்ஜினிற்கும்  டிரான்ஸ்மினிற்கும் இருக்கும் இடையே மிக முக்கியமான திறன் கடத்தும் அமைப்பாக கிளட்ச் உள்ளதால் நாம் சரியாக கையாளவில்லை இல்லை , எனில் நிச்சயம் ஒருநாள் பர்சை பதம் பார்த்து விடும்

நம்மில் பலரும் பாதி கிளட்ச்சில் ஓட்டும் பொழுது நல்ல வேகம் கிடைக்கும் என்று நம்பி கிளட்சை மிதித்து கொண்டே ஓட்டுகிறோம், ஆனால் உண்மையில் இப்படி செய்தால் என்ஜின் பவர் முழுவதுமாக டிரன்ஸ்மிஷன்  சென்று சேராது.

You may like : இவையெல்லாம் உங்கள் பைக் துருப்பிடிக்கமல் பார்த்துக் கொள்ளும்!!!

இதனால் அதிகரிக்கும் அதிக அளவு ரேவ் காரணமாக, வேகமாக செல்வது போன்ற உணர்வை ஏற்படுத்துமே தவிர கார் வேகமாக செல்லாது.

ஆக்சிலரேட்டரை அழுத்துவதற்கும் கிளட்சை ரிலீஸ் செய்வதற்கும் இடையேயான சமநிலை சரியாக இருக்கும் பொழுது மட்டுமே கார் வேகமாக நகரும். ஆனால் எப்பொழுதும் இப்படியே ஓட்டுவது கண்டிப்பாக ஒருநாள் பெரிய செலவு தான்.

கியர் மாற்றியவுடன் கிளட்சை முழுவதுமாக ரிலீஸ் செய்யுங்கள்:

கார் ஓடிக் கொண்டிருக்கும் பொழுது கிளட்சை முழுதாக ரிலீஸ் செய்யாமல் பைட்டிங் பாயிண்ட்ற்கு  சிறிது மேலே வைத்துக்கொண்டு ஓட்டும் பொழுது உராய்வுகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். நம்மில் பெரும்பாலானோர் செய்யும் பொதுவான இந்த தவறு கிளட்ச் மற்றும் கியர் பாக்ஸ் அமைப்புக்கு மொத்தமாக நலங்கு வைத்து விடும்.

கிளட்ச் பெடலை கால் மிதியாக உபயோகப்படுத்தாத படுத்தாதீர்:

பெரும்பாலான மேனுவல் கார்களில் டெட் பெடல் சிஸ்டம் கொடுக்கப்படாததால் பலரும் கிளட்சை  கால் மிதி ஆக உபயோகப் உபயோகப்படுத்துவதால் காரின் ஆக்சில்லரிசன் மற்றும் மைலேஜ் இரண்டும் பாதிக்கப்படும்.

பின்குறிப்பு: டெட் பெடல் இல்லாத பட்சத்தில் நாமே கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம்.

கிளட்சை மிக வேகமாக ரிலீஸ் செய்யாதீர்:

ஒவ்வொரு காரிலும் கிளட்ச்சின் பைட் பாயிண்ட் வெவ்வேறாக இருக்கும், மேலும் ஆக்சிலரேட்டரை அழுத்தாமல் பைட் பாயிண்டை அடையும்போது கார் ஜெர்க் ஆகும்.

இதனால் மொத்த கிளட்ச் அமைப்புமே சீக்கிரமாக சூடாக வாய்ப்புள்ளதால் டிரான்ஸ்மிஷன் அமைப்புக்கு ம் சேர்த்து ஆப்பு வைத்து விடும்.

பின்குறிப்பு: நீண்ட நாட்கள் ஓட்டும் பொழுது உங்கள் காரின் பைட் பாயிண்டை எளிதாக அறிந்து கொள்ளலாம்.

You may like : ராயல் என்ஃபீல்டுக்கான சிறந்த ஆக்சஸரீஸ்கள் இதோ!

பம்பர் டு பம்பர் டிராஃபிக் சாகசங்கள்:

சென்னை, பெங்களூரு போன்ற பெருநகர சிக்னல்களில் ஒவ்வொரு இன்சாக தான் நகர முடியும். இம்மாதிரி டிராபிக்கில் காரை நகர்த்தும் அளவுக்கு இடைவெளி கிடைத்தால் மட்டுமே நகர்த்துங்கள். இல்லையெனில் கையையும் காலையும் வைத்துக்கொண்டு சும்மா இருப்பது நல்லது.

சிறிது சிறிதாக கிளட்சை மிதிப்பதால் ஏற்படும் அழுத்தம் கிளட்ச் பேரிங்கை பாதித்துவிடும். பேரிங் மாற்றுவது எளிது என்றாலும் மொத்த அமைப்பையும் கழற்றி வேலை செய்ய வேண்டியது வரலாம்.

மலையேற்றம்:

செங்குத்தான மலைப்பாதையில் ஏறும் பொழுது கார் பின்னோக்கி நகராமல் இருப்பதற்கான உந்து சக்தியை அளிப்பது கிளட்ச் அமைப்பாகும். மெதுவாக செல்ல வேண்டிய இடங்களில் பிரேக் உபயோகிப்பதற்கு பதிலாக கிளட்ச் மற்றும் ஆக்சிலரேட்டரை மட்டுமே உபயோகபடுத்துவோம். இதனால் கிளட்ச் வெகு சீக்கிரத்தில் சூட் ஆவதற்கான வாய்ப்புகள் அதிகம்,  மேலும் சில நேரங்களில் முழுவதுமாக செயல் இழந்து விடக்கூடிய அபாயம் உண்டு.

Also read : கார் வாங்கப் போறீங்களா? அப்போ உங்க ராசிக்கு ஏற்ற கலர் என்னன்னு தெரிஞ்சுக்கங்க..