உங்க கார்ல ஆசையா டூர் போவீங்களா? இனிமே அவசரத்துக்கும் போலாம்!

நெடுஞ்சாலைகளில் அடிக்கடி நீண்ட தூர பயணம் செய்வோருக்கு சுகாதாரமான கழிப்பிட வசதி என்பது எப்போதுமே சவால் தான்.

இப்பிரச்சினையை தீர்க்க கேரளாவைச் சேர்ந்த சேட்டன் ஒருவர் தனது மகேந்திரா பொலிரோ காரை டாய்லெட் வசதியுடன் மாற்றியமைத்துள்ளார்.

ஓஜஸ் ஆட்டோமொபைல்ஸ் என்ற கோச் பில்டிங் நிறுவனம் இதை கஸ்டமைஸ் செய்து கொடுத்துள்ளது. மேலும் இந்நிறுவனம் மலையாள சூப்பர் ஸ்டார்களான மம்முட்டி, பிரித்திவிராஜ் போன்றோருக்கும் கேரவன் கஸ்டமைஸ் செய்து கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பொலிரோவின் மூன்றாவது வரிசை இருக்கையை முழுவதுமாக அகற்றிவிட்டு  இதை அமைத்திருக்கிறார்கள். பொலிரோவின் அடிப்படை கட்டமைப்பில் எந்த மாற்றமும் செய்யாமல் வெறும் 65 ஆயிரம் செலவில் இதை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விமானங்களில் உபயோகப்படுத்தக் கூடிய வேக்குவம் டாய்லெட் பொருத்தப்பட்டுள்ளதால் துர்நாற்ற பிரச்சினைகளும் இதில் இல்லை. சோப், சனிடைசர் போன்ற உபகரணங்களுக்கும் இடம் ஒதுக்கப்பட்டுளதால் சுகாதார பிரச்சினையும் இல்லை.

தண்ணீர் பிரச்சினையை சமாளிக்க சுத்தமான நீருக்காக ஒன்று ,கழிவு நீர் கழிவு நீரை சேகரிக்க ஒன்று என இரண்டு வாட்டர் டேங்கில் பொருத்தப்பட்டுள்ளன

எப்பொழுது வேண்டுமானாலும் அகற்றிக் கொள்ளும் வகையில் கஸ்டமைஸ் செய்யப்பட்டுள்ள இந்த டாய்லெட் அமைப்பை 40 இன்ச் கேபின் உயரமுடைய எல்லா வாகனங்களிலும் பொருத்திக் கொள்ளலாம் என்கின்றனர் ஓஜஸ் நிறுவனத்தினர்.

மகேந்திரா நிறுவனத்தின் தலைவரான ஆனந்த் மகேந்திரா இந்தப் புதிய கண்டுபிடிப்பை பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.