களையிழந்த சர்வதேச மோட்டர் சைக்கிள் தினம் (ஜுன் 21,2020)
மனிதன் முதல் முதலில் கண்டுபிடித்த சாதனம் சக்கரம் ஆகும். மனிதர்களுக்கு ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதுதான் பிடிக்கும் அது நல்லதும் கூட. உலகில் உள்ள அனைவருமே எதாவது ஒரு வாகனத்தை விரும்புவார்கள்.
முக்கியமாக இருசக்கர வாகனங்கள் ஒவ்வொருவின் வாழ்விலும் முக்கியமானதாக திகழ்கிறது, நாம் முதலில் இருசக்கர வாகனங்களான சைக்கிள், பைக்கை ஓட்ட கற்றுக்கொள்கிறோம்.
ஜூன் 21-ஐ சர்வதேச மோட்டார் சைக்கிள் தினமாக உலக அளவில் கொண்டாடப்பட்டுவருகிறது, மோட்டார் சைக்கிள்கள் மற்றும் அது தொடர்பான அனைத்தையும் கொண்டாடும் நாள் ஜூன் 21. இது ஆண்டின் மிக நீளமான நாளாகும், இது கோடைக்கால சங்கிராந்தி என்று அழைக்கப்படுகிறது.
இதில் பைக் பிரியர்கள் தங்களின் சொகுசு, ஸ்போர்ட் பைக்குகளை கொண்டு வந்து கெத்து காண்பிப்பார்கள். 2019-ல் இந்தியாவில் நடந்த சர்வதேச மோட்டர் சைக்கிள் தின கொண்டாட்டத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பைக் கிளப்புகளில் உள்ள 2000-க்கும் மேற்பட்டோர் தங்கள் பைக்குகளுடன் கலந்துகொண்டு கம்பீரமாக உலா வந்தனர்.
ஆனால் இந்த ஆண்டு ஊரடங்கு தடை உத்தரவு இருப்பதால் இந்த மோட்டர் சைக்கிள் தினத்தை உலகம் முழுவதும் பைக் பிரியர்களால் கொண்டாட முடியவில்லை.
அடுத்த ஆண்டு இந்த தினத்தை சிறப்பாக கொண்டாட வேண்டும் என பைக் பிரியர்கள் திட்டமிட்டுள்ளனர்.
