”6 மாதம் கழித்து பணம் கட்டினால் போதும்” – புது ஈ.எம்.ஐ திட்டம் டி.வி.எஸ் எக்ஸ்.எல் 100
டி.வி.எஸ் மோட்டார் நிறுவனம் புதிய ஈ.எம்.ஐ திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் படி வாகணத்திற்கான ஈ.எம்.ஐ 6 மாதத்திற்கு பிறகு செலுத்தினால் போதுமானது. கொரோனா வைரஸ் பரவுதலின் காரணமாக ஏற்பட்ட விற்பனை சரிசெய்யவும், வாடிக்கையாளர்களின் பொருளாதார நிலவரத்தை கருத்தில் கொண்டு அவர்களை கவரும் வண்ணமாகவும் இந்த சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளது.
பி.எஸ் 6 டி.வி.எஸ் எக்ஸ்.எல் 100 மூன்று வேரியன்டுகளில் வருகிறது. அவை,
- கம்போர்ட் ஐ டச் ஸ்டார்ட்
- ஹெவி டியுட்டி ஐ டச் ஸ்டார்ட்
- ஹெவி டியூட்டி ஸ்பெஷல் ஐ டச் ஸ்டார்ட்
இதன் பி.எஸ் 6 விதிகளின்படி மேம்படுத்தப்பட்ட 99.7 cc சிங்கிள் சிலிண்டர், 4-ஸ்டோர்க் ஃப்யுயல் இன்ஜெக்சன் என்ஜின் ஆனது 4.3 bhp பவரையும், 6.5 Nm டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன்கொண்டது.
மேலும் டெலிஸ்கோப்பிக் போர்க் மற்றும் டுவின் ஷாக் அப்ஸார்பர்ஸ் கொண்ட சஸ்பென்ஷன் அமைப்பு உள்ளது. ஹெவி லோடுகளை தாங்கும் வகையில் நன்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. சி.பி.எஸ் உடன் கூடிய இருபுறமும் டிரம் வகை பிரேக்ஸ் உள்ளன.
சிறப்பம்சங்கள்:
நல்ல ஆக்சலரேஷன், எரிபொருளை நன்கு உபயோகிப்பதில் பி.எஸ் 4 மாடலை விட 15% அளவுக்கு அதிக திறன் கொண்டது, பெட்ரோல் ரிசர்வ் இன்டிகேட்டர், எளிதாக ஆன்-ஆப் செய்யும் வசதி கொண்ட ஸ்விட்ச், மொபைல் சார்ஜிங் வசதி ஆகிய சிறப்பம்சங்களுடன் வருகிறது.
இந்த சிறப்பு ஈ.எம்.ஐ ஆஃப்பர் ஜுலை 31,2020 வரை மட்டுமே உள்ளது.
இதன் விலை (எக்ஸ்-ஷோரூம் விலை)
- கம்போர்ட் ஐ டச் ஸ்டார்ட் – ரூ. 45,114
- ஹெவி டியுட்டி ஐ டச் ஸ்டார்ட் – ரூ. 44,544
- ஹெவி டியுட்டி ஸ்பெஷல் ஐ டச் ஸ்டார்ட் – ரூ. 44,304
