60 கி.மீ ரேஞ்ச் கொண்ட ஹீரோ டேஷ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!
ஹீரோ நிறுவனம் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரான டேஷ் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவிலுள்ள 615 டீலர்ஷிப்களிலும் விற்பனைக்கு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டேஷ் ஸ்கூட்டர் 3 வேரியன்டுகளில் வருகிறது.
- டேஷ் 110
- டேஷ் எல்.ஏ
- டேஷ் எல்.ஐ
கபிரா கொலிஜியோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!
டேஷ் ஸ்கூட்டரில் 250 வாட், 48 வோல்ட், 28 ஏ.எச் லித்தியம்-அயன் பேட்டரி, லீட் ஏசிட் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 4 மணி நேரம் ஆகும், ஒரு முழு சார்ஜில் 60 கி.மீ வரை பயணிக்க முடியும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 25 கி.மீ ஆகும்.
சி.வி.டி ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் , டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷன் , இருபுறமும் டியூப்லெஸ் டயர்கள் கொண்ட அல்லாய் வீல்கள் மற்றும் இருபுறமும் டிரம் பிரேக்குகள் ஆகிய வசதிகள் இடம் பெற்றுள்ளன.
சிறப்பம்சங்கள்:
செல்ப் ஸ்டார்ட், எல்.ஈ.டி ஹெட் லைட்டுகள், அனைத்து கன்ட்ரோல்களும் டிஜிட்டல் முறையில் உள்ளன, தாராளமான சீட், யூ.எஸ்.பி சார்ஜிங், ரிமோட் மூலம் பூட் பகுதியை திறக்கும் வசதி, குறைந்த எடை ஆகிய சிறப்பம்சங்களுடன் வருகிறது.
ஒகினாவா ப்ரேய்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!
விலை (எக்ஸ்-ஷோரூம்):
- டேஷ் 110 – **(விரைவில் அறிவிக்கப்படும்)
- டேஷ் எல்.ஏ – ரூ.50,000
- டேஷ் எல்.ஐ – ரூ.62,000
ஹீரோ எக்ஸ் பல்ஸ் 200, விலை, மைலேஜ், கலர், வேரியண்ட் மற்றும் தொழில்நுட்ப விவரங்கள்
