ஒகினாவா ப்ரேய்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்
இந்திய நிறுவனமான ஒகினாவா ஆட்டோடெக் பிரைவேட் லிமிடெட் 100% மின்சார இரு சக்கர வாகனங்களை உற்பத்தி செய்கிறது. இது 2015 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் எலக்ட்ரிக் மாடலான ப்ரேய்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை மேம்படுத்தி அறிமுகம் செய்துள்ளது.
இதன் பி.எல்.டி.சி மோட்டர் 1000 – 2500 வாட் பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த ஸ்கூட்டரில் 75 வோல்ட், 75 ஏ.எச்வி.ஆர்.எல்.ஏ பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்தபேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 6-8 மணி நேரம் எடுத்து கொள்ளும் நிலையில், இந்த ஸ்கூட்டர் ஒரு முழுசார்ஜில் 200 கிலோமீட்டர் ரேஞ்ச் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எலக்ட்ரானிக் அசிஸ்டடு பிரேக்சிஸ்டமால் (ஈ-ஏ.பி.எஸ்) கட்டுப்படுத்தப்படும் டிஸ்க் பிரேக்குகள் இருபுறமும் கொடுக்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் ஹைடிராலிக் டெலிஸ்கோப்பிக் வித் கேஸ்சார்ஜ் சஸ்பென்ஷன் அமைப்பும், பின்புறத்தில் டபுல்ஷாக்கர் வித் டூயல்டியூப் டெக்னாலஜி சஸ்பென்ஷன் அமைப்பும் பொருத்தப்பட்டுள்ளது. இருபுறமும் 90/90 – 12 டியூப்லெஸ் டயர்கள் கொண்ட அலாய் வீல்கள் உள்ளன.

சிறப்பம்சங்கள்
சைடுஸ்டேனட் சென்சார், அதிக பூட்ஸ்பேஸ் (19.5 லி), 150 கிலோ லோடிங் கெபாஸிட்டி ஆகிய சிறப்பம்சங்களுடன் வருகிறது.
விலை மற்றும் வாரன்டி
இந்த ஸ்கூட்டர் ரூ.69,790 முதல் 71,490 வரையிலான விலையில், மோட்டருக்கு 2 வருட வாரன்டியும், வண்டிக்கும், பேட்டரிக்கும் 1 வருட வாரன்டியுடன் கிடைக்கிறது.
