ஊரடங்கு காலத்தில் உங்கள் மகிழுந்தை மகிழ்ச்சியாக வைத்திருக்க சில டிப்ஸ்:
நாமெல்லாரும் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் இருக்கிறோம், சிலர் வீட்டில் இருந்தே வேலை செய்கின்றோம். நமது கார்களும் அப்படியே ஓடாமல் இருக்கிறது. மேலும் உங்களைப் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருப்பது போலவே, உங்கள் காரையும் நல்ல நிலையில் வைத்திருப்பதும் அவசியமானதாகும்.
இதோ சில பயனுள்ள குறிப்புகள்:
1.மின்கலம் ( பேட்டரி) :
நீண்ட நாட்கள் காரை பயன்படுத்தாமல் வைத்திருந்தால் மின்கலத்தில் உள்ள மின்சக்தி குறைந்துவிடும். எனவே உங்கள் காரை அடிக்கடி அல்லது வாரத்திற்கு ஒரு முறை ஸ்டார்ட் செய்து, குறைந்தது 15 நிமிடம் இயங்கவிடவும்
2.காரின் இயக்கம்:
உங்கள் வீட்டின் எல்லைக்குள்ளேயே காரை சிறிது தூரம் ஓட்டி செல்லவும், இல்லை என்றால் காரை முன்னும் பின்னுமாக இயக்கவும். இது சக்கரங்களில் உள்ள டயர்களை பாதுகாக்கும்.
3.மற்ற கருவிகளின் இயக்கம்:
காரின் குளிர்சாதனக் கருவி, குறிகாட்டிகள் (இன்டிகேட்டர்ஸ்), முகப்பு மற்றும் பின்புற விளக்குகள், கதவு பூட்டுகள், வேக மாற்றி (கியர்), வேக உந்தி (எக்சலரேட்டர்) அனைத்தும் இயங்குகிறதா என சோதித்து பார்க்கவும். சிறிது நேரம் இவைகளை இயங்க விடவும்.
4.தடுப்புக்கருவி (பிரேக்):
நீண்ட நாட்கள் காரை பயன்படுத்தாமல் வைத்திருந்தால் காரின் தடுப்பக்கருவியானது (பிரேக்) செயலாற்றுவதில் சிக்கல் ஏற்படும். எனவே தடுப்பாக கருவிகளை சோதித்துப் பார்க்கவும், இரண்டு மூன்று முறை அதனை இயக்கவும்.
5.காரை உட்புறமும், வெளிப்புறமும் சுத்தம் செய்தல் :
காருக்குள் ஏதேனும் குப்பைகள் இருந்தால் அதனை அகற்றவும், தூசிகளை தூசி உறிஞ்சி மூலம் சுத்தம் செய்யவும். காற்று வரும் துவாரங்கள் மற்றும் கால் மிதியடிகளை சுத்தம் செய்யவும். காரின் வெளிப்புறத்தை கிருமி நாசினி கலந்த தண்ணீர் கொண்டு கழுவவும்.காரின் கண்ணாடிகளை நன்கு துடைக்கவும், மேலும் காரை கார் உறைகொண்டு மூடவும்
மேலும் உங்கள் காரை நிழலான பகுதியில் நிறுத்தவும். இவ்வாறு செய்யும் போது உங்கள் காரை நல்ல நிலையில் வைத்திருக்க முடியும், உங்கள் பயன்பாட்டிற்காக காரை எடுக்கும் பொழுது நன்றாக இயங்கும்.
** கீழே உள்ள பகுதியில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை கொடுத்து எங்கள் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளவும், இதன் மூலம் எங்கள் இணையதளத்தில் பதிவிடப்படும் புது பதிவுகள் உடனுக்குடன் உங்களைத் தேடி வரும்.
