ஜாவா மற்றும் யெஸ்டி பைக் பிரியர்களுக்கு ஓர் நற்செய்தி!! 

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த ஜாவா யெஸ்டி மோட்டார்சைக்கிள் கிளப் ஒன்று கூகில் மேப்பில் ஜாவா பைக்  மெக்கானிக்களின் தகவல்களை கொண்ட பட்டியலை கூகில் மேப்பில் வெளியிட்டுள்ளனர்.
 
இந்தியா முழுவதும் ஜாவா போன்ற கிளாசிக் மாடல்களின் பிரியர்கள் கிளப்கள் மூலம் நீண்ட தூர பயனங்கள் மேற்க்கொள்வது டிரெண்டாகியுள்ளது. ஆனால் இது போன்ற கிளாசிக் மாடல்களுக்கான மெக்கானிக்களை கண்டுபிடிப்பது தான் சிரமமான காரியம். பெங்களூர் ஜாவா யெஸ்தி மோட்டோர்சைக்கிள் கிளப் தற்போது இந்தியா முழுவதும் ஏறக்குறைய 30 மெக்கானிக்களை பட்டியலிட்டுள்ளது.
 

 
இந்த கிளப்பில் உறுப்பினர் ஒருவர் நெடுந்தூர பயணம் சென்ற போது வண்டி இடையிடையே மக்கர் பண்ண, நீண்ட நேரம் அலைந்தும் எங்கும் மெக்கானிக் கிடைக்காமல் கிளப் அலுவலகத்தை தொடர்பு கொண்ட போது சேகரித்து வைக்கப்பட்டிருந்த மெக்கானிக்களின் தகவல்கள் மூலம் கண்டுபிடித்திருக்கிறார். இந்த யோசனையிலேயே கூகில் மேப்பில் இந்த தகவல்களை பதிவிட்டு அறிமுகப்படுத்தியுள்ளது.
 
தற்போது, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மஹாராஸ்டிரா, ராஜஸ்தான் மற்றும் ஜம்மூ காஸ்மீர் ஆகிய மாநிலங்களில் உள்ள மெக்கானிக்களின் தகவல்களை இதன் மூலம் பெறலாம். மேலும் விருப்பமுள்ள மெக்கனிகள் உரிய தகவல்களூடன் தொடர்பு கொண்டு தங்களை இணைத்து கொள்ளலாம்.
கூகில் லிங்க் இதோ