இவையெல்லாம் உங்கள் பைக் துருப்பிடிக்கமல் பார்த்துக் கொள்ளும்!!!
வாகனங்கள் துருப்பிடிப்பது பொதுவாக எப்போதும் நடக்க கூடிய ஒன்று. ஆனால் இவை அதிகமாகும் போது சில சமயம் உதிரி பாகங்களையே மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடும். சரி விசயத்துக்கு வருவோம்.
- முதலில் அடிக்கடி சுத்தபடுத்துவதும் பாரமரிப்பதும் ஆரம்பத்திலேயே கட்டுபடுத்த உதவும்.
- துருப்பிடித்த இடங்களை முதலில் மோட்டார் சைக்கிள் சாம்பூ கொண்டு சுத்த படுத்திய பின்பு ஒரு வறண்ட மெல்லிய துணியை கொண்டு ஈரத்தை துடைத்து விடுங்கள்.
- துருவின் அளவு பெரியதாக இருப்பின் மெல்லிய ஊராய்வுப் பொருள் அல்லது உப்புக் காகிதத்தாள் கொண்டு கவனமாக தேய்க்கவும். ரொம்ப அழுத்தி தேய்க்க வேண்டாம் ஓட்டைகள் ஏற்ப்பட வாய்ப்பு உண்டு ஜாக்கிரதை.
- பிறகு,குரோம் பாளீஸை துருப்பிடித்த பகுதியின் மேல் பூசி, அதன் மேல் மெழுகு தடவி விடுங்கள், இது மீண்டும் அந்த இடத்தில் துரு பிடிப்பதை தடுக்கும்
- கடைசியாக, இது பழய்ய்ய வழிமுறை மேற்க்கத்திய மக்களால் பின்பற்றபட்டது, அலுமினியம் ஃபாய்ல் தாளை உள்பக்கமாக கோக் அல்லது பெப்ஸி(நாம் விரும்பி குடிக்கும்!!) ல் நனைத்து எடுத்து துருவின் மேல் தேய்க்க பலன் தருகிறாதம், முயற்ச்சித்து பாருங்கள்.
- விண்ட்டேஜ் பைக்குகளில் இதை முயற்சிக்க வேண்டாம், அதன் பழமை கெட்டு விட வாய்ப்பு உண்டு.
பின்குறிப்பு: இவை யாவும் தற்காலிக வழிமுறைகள், முக்கியமான பகுதிகளில் ஏற்ப்பட்டால் மெக்கானிக்கை அணுகுவது நல்லது.
