உங்கள் பைக் அதிகம் டயர் தேய்கிறதா? இதோ புதிய MRF டயர்!!!
MRF நிறுவனம் புதிய தொழில்நுட்பதுடன் கூடிய மஸேஸ்டர் டயர்களை அறிமுகம் செய்துள்ளது. இப்புதிய டயர்கள் பைக் மாடல்களை பொறுத்து ரூ 3500 – 5000 வரையிலான கைகெட்டும் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.
இப்புதிய டயர்கள் 150சிசி ரேன்ஜ் பைக்குகளுக்கு என பிரத்தியேகமாக MRF நிறுவனத்தின் புதிய தொழில்நூட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இவை குறிப்பாக வளைவுகளில் சிறந்த தாரைபிடிப்பை வழங்கக்கூடியவை. மிருதுவான காம்பவுண்ட் ரப்பர் மூலம் தயாரிக்கப்பட்ட இந்த டயர்கள் அதிவேக நெடுஞ்சாலை பயணங்களுக்கு ஏற்றதாக இருக்கும் எனவும் குறைந்த அளவிலான தேய்மானத்தை கொண்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த டயர் நம் கோயம்புத்தூரில் உள்ள கரி மோட்டார் பந்தய சாலையில் முதன் முதலாக அறிமுகம் செய்யப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது என்பது பெருமைக்குரிய விசயம். தற்போது அனைத்து விதமான சாலைகளிலும் சோதனை செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
