ரெனோ க்விட் AMT 4.25 லட்சம் விலையில் விற்பனைக்கு வந்தது!!

2016 ஆம் ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தப்பட்ட ரெனோ க்விட் AMT, க்விட் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றது. அப்போதிருந்தே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய க்விட் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. இது ரெனோ க்விட் விற்பனைக்கு மேலும் வலுச்சேர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.

மேலும் இந்த எஎம்டி மாடல் க்விட்டின் டாப் வேரியண்டான ஆர்எக்ஸ்டி (RXT O)யில் மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. க்விட் எஎம்டி மாடல் 1.௦ லிட்டர் டாப் வேரியண்டின் விலையை விட 30,000 ரூபாய் கூடுதலாக 4.25 லட்சம் (எக்ஸ்ஷோரூம்,டெல்லி) விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

renault-kwid-amt-with-badge

தோற்றத்தை பொருத்தவரை ரெனோ க்விட் மேனுவல் வேரியண்டை அடிப்படையாக கொண்டுள்ளது . மற்றும் எஎம்டி மாடலை குறிக்கும் வகையில் ஈஸீ ஆர் (Easy – R) பேட்ஜ் பின்புறம் ஒட்டப்பட்டுள்ளத்தை தவிர வேறெந்த மாற்றமும் இல்லை.

இன்டீரியர் தோற்றத்திலும் எந்தவிதமான மாறுதலும் இல்லை. அதேசமயம் 7 இன்ச் தொடுத்திரை, டிஜிடல் இன்ஸ்ட்ரூமன்ட் கிளஸ்டர், சென்ட்ரல் லாக் மற்றும் ரிமோட் கிலெஸ் எண்ட்ரி போன்ற நவீன சாதனங்களை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

renault-kwid-amt-intrior

க்விட் எஎம்டி 1 லிட்டர் என்ஜினுடன் 68 பிஎஸ் பவரை 5500 ஆர்பிஎம் லும், 91 என்எம் டார்க்கை 4250 ஆர்பிஎம் லும் அளிக்கும் சக்தி கொண்டது. அராய் சான்றுபடி லிட்டருக்கு 24.4 கிமீ மைலேஜை அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மேனுவல் வேரியன்டின் மைலேஜை 23.01 விட அதிகம். மேலும் க்விட் எஎம்டி ரிவர்ஸ், நியூட்ரல், டிரைவ் என மூன்று டிரைவிங் மோடுகளை கொண்டுள்ளது.