பண்டிகை காலத்தில் 12.5 லட்சம் வாகனங்களை விற்பனை செய்த ஹோண்டா!
ஹோண்டா நிறுவனத்திற்கு இந்த பண்டிகை காலம் மிகச்சிறப்பானதாக அமைந்துள்ளது. கடந்த இரண்டு மாத காலத்திற்குள் கிட்டத்தட்ட 12.5 லட்சம் பைக்குகளை விற்பனை செய்து அசத்தியுள்ளது.
இந்த விற்பனை வளர்ச்சியானது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 25% வளர்ச்சியாகும். அதே போல் இந்த பண்டிகை காலத்தில் ஹோண்டா முதன் முறையாக பத்து லட்சம் எண்ணிக்கையை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இச்சாதனையில் சந்தேகத்திற்கு இடமின்றி ஆக்ட்டிவா தான் ஆட்ட நாயகன்! கிட்டத்தட்ட 7 லட்சம் யூனிட்டுகள் விற்பனையாகியுள்ளன
அடுத்த இடத்தில 125சிசி செக்மென்ட்டில் ஹோண்டா சிபி சைன் இரண்டு லட்சம் யூனிட்டுகள்வி ற்பனையாகியுள்ளது. இந்திய இரு சக்கர வாகன சந்தை ஸ்கூட்டர்களின் கட்டுப்பட்டில் உள்ளது உறுதியாகி உள்ளது. இதனை வழிமொழியும் வகையில் ஹோண்டா தனது முழு உற்பத்தி அளவை எட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதன் மூலம் ஹோண்டா நிறுவனம் இந்த வருடத்தின் முதல் 7 மாதங்களில் 30 லட்சம் யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது. இதில் ஸ்கூட்டர்கள் மட்டுமே 20 லட்சம் யூனிட்டுகள் விற்பனை ஆகியுள்ளது. குறிப்பாக அக்டோபர் மதம் மட்டும் 4,92,367 யூனிட்டுகள் விற்பனையாகியுள்ளன. இன்னோரு சுவாரஸ்யமான செய்தி ஹோண்டா தொடர்ந்து 4 மாதங்களாக 3லட்சம் யூனிட்டு ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது.
