நவியின் உற்பத்தியை இரட்டிப்பாக்கிய ஹோண்டா!!!
ஹோண்டா தனது நவி மாடலுக்கு பெரும் வரவேற்பு கிடைத்ததையடுத்து நவி மினி பைக்கின் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
ஜப்பான் பைக் மேக்கரான ஹோண்டா, நவி மினி பைக் மாடலை அறிமுகப்படுத்திய போது நகைச்சுவையான பைக் என வர்ணிக்கப்பட்ட நவி தற்போது சிறப்பான விற்பனை மற்றும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்திய மார்க்கெட்டில் ரூ39000 எக்ஸ் ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்த நவி அறிமுகமான சில மாதங்களிலேயே 10,000 யூனிட்டுகளை கடந்து விற்பனை ஆனது. இதனை கருத்தில் கொண்டு தற்போது உற்பத்தியை இரட்டிப்பாக்கும் முடிவை ஹோண்டா நிறுவனம் எடுத்துள்ளது.
ஹோண்டா இந்தியா நிறுவனத்தின் துணை தலைவர் யதுவீந்தர் சிங் கூறுகையில், நவி மாடலுக்கு இந்தளவுக்கு வரவேற்பு கிடைக்குமென்று நாங்களே எதிர்பார்க்கவில்லை. மார்க்கெட் கணிப்பையை விட சிறந்த வரவேற்பை நவி பெற்றுள்ளது. எனவே நவியின் உற்பத்தி 90000 முதல் 100000 வரை உயர்த்த முடிவு செய்துள்ளாோம் என அறிவித்துள்ளார்.

நவி மினி பைக் உற்பத்திக்கு முன்பு டெஸ்ட் செய்யப்பட்ட அதே 110சிசி திறன் கொண்ட ஃபோர் ஸ்ட்ரோக் என்ஜின், 8 பிஎஸ் பவர் மற்றும் 9 என்எம் உட்ச்பட்ச டார்க்கை அளிக்கும் திறன் கொண்டது. 3.8 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டாங்க் கொண்டது. ஆராய் சான்றுபடி லிட்டருக்கு 60 கிமீ மைலேஜை அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைக்கு இந்தியாவில் 10 நகரங்களில் மட்டுமே விற்பனையாகும் நவி, பலத்த வரவேற்பையடுத்து மற்ற நகரங்களிலும் இந்தாண்டு இறுதிக்குள் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளதாக ஹோண்டா தெரிவித்துள்ளது.
