இதோ 2017 ஆம் ஆண்டிற்கான பெனல்லி TRK 502 அட்வென்ஞ்சரிங் டூரர்!

பெனல்லி நிறுவனம் தனது முதல் அட்வென்ஞ்சரிங் டூரர் மோட்டார் சைக்கிள் மாடலை இந்தியாவில் 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தவுள்ளது.

சமீபத்தில் தனது 17 வது ஷோரூமை திறந்த DSK – பெனல்லி கூட்டணி மூலம் தான் இந்த மாடல் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது. இதேபோல் கடந்த ஆண்டு கான்செப்ட் மாடலாக அறிமுகப்படுத்தப்பட்ட TRK அமேசான் உற்பத்தி நிலையை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த TRK 502 மாடல் முதல் முதலாக 2015 EICMA வில் அறிமுகப்படுத்தப்பட்டு நல்ல வரவேற்பையும் வாடிக்கையாளர்களின் விசாரணையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

அட்வெஞ்சர் டுரர் செக்மென்ட்டில் ராயல் என்பீல்டு ஹிமாலயன், குறைவான விலை கொண்ட கவாஸகி வெர்சிஸ் போன்றவை ரூ10 லட்சம் விலை ரேஞ்சில் விற்பனை செய்யப்படும் நிலையில் DSK – பெனல்லி  தற்போது  TRK 502 மாடலை 5 முதல் 5.5 லட்சம்(எக்ஸ் ஷோரூம்) வரையிலான விலையில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2016-benelli-trk502

TRK 502 மாடலின் டிசைன் மற்றும் லுக் போன்றவை டுகாட்டி மல்டிஸ்டிராடா  1200 மாடலைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. எஞ்சினை பொறுத்தவரை பெனல்லி TRK 502 புதிதாக உருவாக்கப்பட்ட  500 சிசி திறன் கொண்ட பேரலல் ட்வின் எஞ்சின் 40 பிஎஸ் பவரை 8500 ஆர்பிஎம் லும் 45 என்எம் டார்க்கை 4500 ஆர்பிஎம்  லும் அளிக்கவல்லது. ஹைட்ராலிக் கிளட்ச் கட்டுப்பாட்டுடன் கூடிய 6 ஸ்பீடு ட்ரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது.

TRK 502 இன் 20 லிட்டர் கொள்ளளவு  கொண்ட பெட்ரோல் டேங்க் நீண்ட பயணங்களுக்கு நிச்சயம் உதவும். முன்புறம் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய போர்க்குகளையும் பின்புறம் மோனாசாக்  யூனிட்டையும் கொண்டுள்ளது. பிரேக்குகளை பொறுத்தவரை முன்புறம் டூயல் டிஸ்க் 320 மிமீ இரட்டை பிஸ்டன் கேளிபர்களுடனும் பின்புறம் இரட்டை பிஸ்டன்  கேளிபர்களுடன் 260 மிமீ சிங்கில் டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பைரேலி டயர்கள் இது போன்ற டூரிங் மாடல்களுக்கு மிகவும் ஏற்றது. முன்புறம் 120/70 R17 மற்றும் பின்புறம் 160/60 R17 அளவுள்ள டயர்கள் உபயோகிக்கப்பட்டுள்ளன. 17 இன்ச் அலாய் வீல்கள்  கொடுக்கப்பட்டுள்ளது.

You may also like this : இந்தியாவில் 17வது டீலர்ஷிப் ஷோரூமை திறந்த பெனல்லி!!!