ஒரு லட்சம் மைல்கல்லை கடந்த டிவிஎஸ் விக்டர்!
கடந்த 9 மாதங்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்டு விற்பனையை தொடங்கிய டிவிஎஸ் விக்டர் நல்ல வரவேற்புடன் நிறுவனத்திற்கு சிறந்த விற்பனை பங்களிப்பை அளித்து வருகிறது. தற்போது விக்டர் மொத்த விற்பனையில் 8 சதவீதத்தை கொண்டுள்ளது. ரீ லாஞ்ச் மாடலான விக்டர் அடுத்த இரு வருடங்களில் 10-12 சதவீத விற்பனையை கைப்பற்றும் என டிவிஎஸ் எதிர்பார்க்கிறது.
விக்டர் மூன்று வால்வுகளுடன் கூடிய 109.7 சிசி திறன் கொண்ட எக்கோதிரஸ்ட் என்ஜினுடன் 9.6 பிஎஸ் பவரையும் 9.7 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. 4 ஸ்பீட் கியர்பாக்ஸ் கொண்ட இந்த விக்டர் மாடல் முன்புறம் டெலஸ்கோபிக் சஸ்பென்ஸனுடனும் பின்புறம் ஐந்து அடுக்குகளால் ஆன உயரம் சரிசெய்து கொள்ளக்கூடிய இரட்டை ஸ்பிரிங் சஸ்பென்ஸனும் கொடுக்கப்பட்டுள்ளன.

ஸ்டண்டார்டு வேரியாண்டில் இருபுறமும் டிரம் பிரேக்குகள் மட்டுமே கொடுக்கப்பட்ட நிலையில் விருப்பத்தேர்வாக டிஸ்க் பிரேக் வசதியும் கொடுக்கப்படுகிறது. 8 லிட்டர் கொள்ளளவுள்ள பெட்ரோல் டேங்க் 2 லிட்டர் ரிஸர்வ் வசதி கொண்டது. அராய் சான்றுபபடி லிட்டருக்கு 76 கிமீ மைலேஜ் கொடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரெட், ப்ளாக் ரெட், ப்ளாக் சில்வர், கிரே மற்றும் சில்வர் ஆகிய ஆறு வண்ணங்களில் கிடைக்கிறது. ட்ரம் பிரேக் மாடல் ரூ 59,000(ஆன் ரோடு, சென்னை) மற்றும் டிஸ்க் பிரேக் மாடல் ரூ 61,197(ஆன் ரோடு, சென்னை) விலையிலும் கிடைக்கின்றது.
You may also like this: 70 மில்லியன் வாகனங்களை விற்பனை செய்த ஹீரோ!
