70 மில்லியன் வாகனங்களை விற்பனை செய்த ஹீரோ!
உலகின் மிகப்பெரிய இருசக்கர வந்த தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹீரோ மோட்டார் கார்ப் 70 மில்லியன் (7 கோடி) வாகனங்களை விற்பனை செய்து அசரடித்துள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு 50 மில்லியன் சாதனையை கடந்த ஹீரோ, அடுத்த மூன்றே ஆண்டுகளில் 20 மில்லியன் வாகனங்களை விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வை கொண்டாடும் வகையில் புதிதாக அறிமுகப்படுத்திய Achiver 150 மாடலின் லிமிடெட் எடிசனை அறிமுகப்படுத்த உள்ளது. அச்சீவர் 150 ஸ்பெசல் எடிசனுக்கு புதிய மூவர்ணக் கலவையில் வெள்ளை நிறத்தில் கிராபிக்ஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன.மேலும் இந்த 70 மில்லியன் எண்ணிக்கை இந்தியாவின் 70 வருட சுதந்திரத்துடன் ஒத்துப் போவதை தொடர்ந்து 70 யூனிட்டுகள் மட்டுமே தயாரிக்கப்படவுள்ளது கவனிக்கத்தக்கது.
ஹீரோ மோட்டார் கார்ப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பவான் மன்ஜால் கூறுகையில், 70 மில்லியன் வாகனங்களை விற்பனை செய்துள்ளதை குறித்து ஹீரோ பெருமகிழ்ச்சி அடைகிறது. குறிப்பாக பிரதமரின் மேக் இன் இந்தியா போன்ற திட்டங்கள் வளர்ச்சியை எட்டுவதற்கு உறுதுணையாக இருந்தது. 100 மில்லியன் இலக்கை விரைவில் எட்ட நடவடிக்கை எடுத்து வருவதாகவும் இதற்காக இந்தியா முழுவதும் புதிதாக உற்பத்தி அலைகளை நிறுவப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போது ஹீரோ நிறுவனம் இந்தியாவில் குர்கான், தருகெரா, நிம்மரனா மற்றும் ஹரித்துவார் மற்றும் கொலம்பியாவில் உற்பத்தி அலைகளை கொண்டுள்ளது. மேலும் இந்நிறுவனம் தற்போது ஆண்டுக்கு 80 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்து வருகின்றது.
பங்களாதேஷில் ஆரம்பிக்கப்பட்ட புதிய ஆலை வரும் 2017 ஆம் ஆண்டு உற்பத்தியை தொடங்கவுள்ளது. இது வருடத்திற்கு 1.5 லட்சம் யூனிட்டுகளை உற்பத்தி செய்யும் திறன் கொண் டதாக இருக்கும் எனவும் மேலும் சித்தூர் மற்றும் ஆந்திரபிரேதசம் ஆகிய பகுதிகளில் வருடத்திற்கு 5 லட்சம் யூனிட்டுகள் உற்பத்தி திறன் கொண்ட ஆலைகளை அமைக்கவும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
You may also like this : கபாலி பாணியில் மஹிந்திரா சென்ச்சுரோ ஸ்பெசல் எடிசன் அறிமுகம் !
