மாசுக்கட்டுப்பாட்டு பிரச்சனையில் நேரடியாக களமிறங்கும் போக்குவரத்து துறை!
மாசுக்கட்டுப்பாட்டு விதிமுறைகள் இந்தியாவை தவிர உலகின் மற்ற பகுதிகளில் மிகக்கடுமையானவை. அப்படியிருந்தும் உலகின் மிகப்பெரிய கார் நிறுவனங்கள் அடிக்கடி ஏதாவது கோல்மால் செய்வதும் மாட்டிக் கொள்வதும் அன்றாட செய்தியாகிவிட்டது.
இது உலக சுற்றுச்சூழலை மட்டுமல்ல ஆடோமொபைல் துறையின் நற்பெயருக்கு கலங்கத்தையும் எற்படுத்தும் என்பதே உண்மை. சமீபத்தில் பியட் கிரைசலர் ஜெர்மனியில் புகைக்கட்டுப்பாட்டு சாதனங்களில் ஏமாற்று வேலை செய்ததற்காக தடை செய்யப்பட்டது நினைவிருக்ககலாம்.
அதே போல இங்கே ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தவறு செய்தது தெரிந்தும் நம்மால் உரிய நடவடிக்கை எடுக்க முடியாமல் போனதற்கு நம் நாட்டில் இதற்கான சட்ட ரீதியான நடைமுறை கடுமையாக பின்பற்றப்படாததே காரணம்.
இதை கருத்தில் கொண்டு நமது அரசு தற்போது களத்தில் இறங்கி உள்ளது. வரும் 2020 ஆம் ஆண்டில் இருந்து பாரத்ஸ்டேஜ் VI நடைமுறைக்கு வந்த பின்பு 50% மாதிரிகள் நேரடியாக டிலர்களிடம் இருந்து சோதனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது.
இதன் மூலம் தயாரிப்பு நிலை மற்றும் அதன் பிறகும் கூட இச்சோதனையில் தேறிய வாகனங்கள் மட்டுமே விற்பனைக்கு அனுமதிக்கப்படும். மேலும், இந்த சோதனைக்கான தனியார் ஏஜன்சிகள் அரசின் மூலம் மட்டுமே நியமிக்கப்படும். இதே போன்ற நடைமுறை சோதனைகள் இருக்கும்பட்சத்தில் மட்டுமே பன்னாட்டு நிறுவனங்கள் மீது நமது அரசு நடவடிக்கை எடுக்க ஏதுவாக அமையும்.
இவை எல்லாவற்றையும் விட ஏலக்டிரிக் வாகனத் தயாரிப்பை ஊக்கப் படுத்துவதே மிகசிறந்த மற்றும் மிக எளிய வழி என்பது சமூக ஆர்வலர்களின் கருத்து. மேலும் அரசு ஊக்கம் அளித்தால் மட்டுமே எலக்ட்ரிக் வாகன போக்குவரத்தை சத்தியப்படுத்த முடியும் என்பது தான் தற்போதைய நிலைமை..
