ராயல் என்ஃபீல்டுக்கான சிறந்த ஆக்சஸரீஸ்கள் இதோ!
உங்களுடைய ராயல் என்ஃபீல்டு பைக்கை ஆல்ட்ரேசன் பண்ண விரும்புகிறீர்களா? இதோ உங்களுக்காக சில ஆக்சஸரீஸ்கள்!!!
மார்க்கெட்டில் தினந்தோறும் புதிது புதிதாக கண்டுபிடிப்புகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் என்ஃபீல்டு மாடல்களுக்கு ஏகப்பட்ட புதிய தொழில்நுட்ப வசததிகள் கொண்ட அக்சஸரீஸ்கள் கிடைக்கின்றன. அவற்றில் சிலவற்றை தொகுத்து வழங்கியுள்ளோம். குறிப்பாக இந்த மாடல் பைக்குகள் எப்போதுமே எப்படி வேண்டுமானாலும் கஸ்டமைஸ் செய்து கொள்ள கூடிய வடிவமைப்பை கொண்டது.
குறிப்பிட்ட சில அக்சஸரீஸ்கள் சாலை விதிமுறைகளை கருத்தில் கொண்டே மாற்ற வேண்டும். எனவே என்னென்ன வேண்டும் என்று ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்யுங்கள்.

அலாய் வீல்கள் :
அலாய் வீல்கள் தற்போது கிட்டத்தட்ட அனைத்து ராயல் என்ஃபீல்டு மாடல்களிலும் அடிப்படை வசதியாகவே கொடுக்கப்படுகிறது. சரியான அலாய் வீல்கள் உங்கள் லட்சுமி(பைக்) யின் அழகை நிச்சயம் பண்மடங்கு கூட்டும். அழகுக்காக மட்டுமல்ல ஏறத்தாழ அனைத்து ஆலாய் வீல்களும் ட்யூப்லெஸ் டயர்கள் மற்றும் பைரேலி ட்யூப்லெஸ் டயர்களுக்கு அருமையாக பொருந்தும். இந்த டயர்கள் விலை கொஞ்சம் கூடுதலாக இருந்தாலும் நிச்சயம் சிறந்த சாலை பிடிமானத்தை தரும். விலை குறைவாக வேண்டுமென்று விருப்பப்பட்டால் எம்ஆர்எஃப் சேப்பர் டயர்கள் சிறந்த தேர்வாக இருக்கும்.
இவை பைரேலி டயர்களை போல சிறந்த தரைபிடிப்பை வழங்காது ஆனால் நிச்சயம் நீண்ட நாள் உழைக்கும். அலாய் வீல்கள் அநேக டிசைன்களில் கிடைக்கிறது. குறிப்பாக சதேவா மோட்டோர்சைக்கிள் கம்பெனி பிரபலமான நிறுவனம். மேலும் இங்கு ஹார்லீ டேவிட்சன் மற்றும் தண்டர்பேர்டு போன்ற மாடல்களுக்கான ரிம்களும் கிடைக்கும் என்பது கூடுதல் செய்தி.
இந்த வீல்கள் தோராயமாக ரூ8,500 முதல் விலை ஆரம்பமாகிறது. ஒரே ஒரு பாதகமான விசயம் என்னவெனில் அலாய் வீல்கள் ஆஃப் ரோடு பயணங்களுக்கு ஏற்றதல்ல. எனவே ஆஃப் ரோடு சாகச பிரியர்கள் ஸ்போக் வீல்களை தேர்வு செய்வதே சிறந்தது.

புகைபோக்கிகள் :
ராயல் என்ஃபீல்டு பைக் ஆல்ட்ரேசன் என்றாலே நிச்சயம் புகைப்போக்கி இல்லாமல் முழுமை பெறாது. மாசுக்கட்டுப்பாடு விதிமுறைகள் மிகக்கடுமையாக நடைமுறைபபடுத்தப்பட்டு வரும் நிலையில் புகைபோக்கியை தேர்ந்தெடுக்கும் போது விதிமுறைகளையும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள். புகைபோக்கிகள்,ஸார்ட் பாட்டில், இந்தோரி, லாங் பாட்டில், வைல்டு போர், மெகாபோன் போன்ற ஏராளமான மாடல்கள் மார்க்கெட்டில் குவிந்து கிடக்கின்றன.
இவை சாதாரணமாக ரூ3,000 விலையில் இருந்து கிடைக்கின்றன. இந்த புகைபோக்கிகள் நீங்கள் எதிர்பார்க்கும் சப்தத்தை நிச்சயம் கொடுக்கும் அதே சமயம் எதிர்பார்க்கும் தரம் கிடைப்பது சிரமமே. உங்களுடைய பர்ஸ் கனமாக இருந்தால் அதற்கும் வழி உண்டு. கலிதாரோ மற்றும் ரெட் ரூஸ்டர் போன்ற பிராண்டுகள் நல்ல தரத்துடனும் விலை குறைந்தபட்சம் ரூ9,500 ரூபாயிலிருந்து கிடைகின்றன.

எல்இடி விளக்குகள் :
நீண்ட தூர பயண பிரியர்களுக்கு இரவு நேரங்களில் நல்ல ஒளி தரும் விளக்குகள் மிகவும் அவசியம். அதே போல் பின்புறமும் சிறிய ப்ளாஷ் லைட்டுகளை பயன்படுத்துங்கள். அதிவேகத்தில் வரும் கார்கள் டிரக்குகள் எளிதாக உங்கள் வாகனம் சென்று கொண்டிருப்பதை அறிந்து கொள்ள உதவும். க்ரீ போன்ற பிராண்டுகள் சிறந்த வெளிச்சத்தை தரும். ஆனால் முக்கியமாக எல்இடி விளக்குகளை இரவு பயணங்களில் தேவையான போது மட்டுமே பயன்படுதுங்கள்.

டிராவல் பேக்குகள் :
நீண்ட தூர பயணம் செய்யும் ராயல் என்ஃபீல்டு வாடிக்கையாளர்களுக்கு இந்த சேடில் பேக்குகள் இல்லாமல் பயணம் முழுமையடையாது. நிரந்தரமான மெட்டல் பேக்குகள் பெரும்பாலும் பைக்குடன் விருப்பத்தேர்வாக கொடுக்கப்பட்டாலும் உபயோகப்படுத்தியவுடன் கழற்றிக் கொள்ளும் யூஸ் அண்ட் த்ரோ பேக்குகள் சிறந்தவை.
அதே போல் டேங்க் கவர்களும் இன்றியமையாதவை. முக்கியமான பேப்பர்கள் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்களை வைக்க உதவும். சில பிரபலமான பிராண்டுகளான வியா டேரா, கிராம்ஸ்டார், ரினாக்ஸ், டர்ட்சேக் போன்றவை பல்வேறு வகையான சேடில் பேக்குகளை விற்பனை செய்கின்றன. விலையும் கைக்கு அடக்கமாகவே இருக்கும், 3,000 முதல் 4,000 ரூபாய் விலையில் இவற்றை வாங்கலாம்.
விண்ட்ஷில்டு :
க்ரூஸர் லுக் வேண்டும் என்று நினைப்பவர்கள் இதை ஒதுக்க முடியாது. தற்போது மார்க்கெட்டில் ஏராளமான கஸ்டமைஸ் ஆப்சன்களுடன் வீண்ட்ஷில்டுகள் கிடைக்கின்றன. அதே சமயம் இவை சில என்ஃபீல்டு மாடல்களுக்கு மட்டுமே மிகச்சரியாக பொருந்துவதுடன் நல்ல தோற்றத்தையும் கொடுக்கும். எனவே உங்களுடைய மாடலுக்கு எது சரியாக பொருந்துகிறது என்பதை நீங்களே தீர்மானியுங்கள்.
மற்றொரு முக்கியமான விசயம் இந்த விண்ட்ஷில்டுகள் கண்டிப்பாக உங்கள் வண்டியின் ஏரோடைனமிக்கை பாதிக்கும். பெரிய அளவில் இல்லாவிட்டாலும் ஓட்டுதல் தரம் மாற வாய்ப்புள்ளது. 70 முதல் 80 கிமீ வரையிலான வேகம் எந்த பதிப்பையும் ஏற்படுத்துவதில்லை என்றாலும் முழுமையாக சோதனை செய்துகொள்ளுங்கள்

கிராஷ் கார்டுகள் :
புதிய பைக்குகளுக்கு இந்த கிராஷ் கார்டுகள் இன்றியமையாதவை, இவை பைக் கீழே சாயும் போது பெட்ரோல் டாங்க் மற்றும் இதர பாகங்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும். தற்போது பின்புறத்திற்கான கிரேஸ் கார்டுகளும் கிடைக்கின்றன. மேலும் இவற்றில் கயிறுகளை சுற்றி விட்டால் பிடித்து தூக்குவதற்கு ஏதுவாகவும் இருக்கும்.
இவை அனைத்துமே பொதுவான யோசனைகள். உங்கள் மாடல் மற்றும் வசதிகளை பொறுத்து இவை மாறுபடலாம்.
You may also like this : ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் விலை உயர்கிறது!
