டாப் 10 பட்டியலுக்குள் அதிரடியாக நுழைந்த ஹோண்டா நவி!!!

புதிய ஹோண்டா நவி சென்ற ஜூலை மாதம் 11,500 யூனிட்டுகள் விற்று டாப் 10 பட்டியலுக்குள் அதிரடியாக நுழைந்துள்ளது. போட்டிகள் நிறைந்த வர்த்தகத்தில் தனித்துவம் என்பது வாடிக்கையாளர்களை நம்பி இருக்கும் அனைத்து நிறுவனகளுக்கும் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. அதே வழியில் ஹோண்டாவும் சமீபத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் கலப்பில் புதிய ஹோண்டா நவியை உருவாக்கி உள்ளது.

மேலும் ஹோண்டா நிறுவனத்திடம் இருந்து இப்படி ஒரு நகைச்சுவையான மாடலை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இதுதான் ஹோண்டாவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தால் உருவாக்கப்பட்ட முதல் இருசக்கர வாகனமாக 2016 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டது. ஹோண்டாவின் இந்த சோதனை முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகவே ஜூலை மாத விற்பனை பார்க்கப்படுகிறது. 11,644 யூனிட்டுகளாக மொத்த ஸ்கூட்டர் விற்பனை இந்த மாடலை டாப் பட்டியலுக்குள் வர உதவி இருக்கிறது.

மேலும் இந்த மாடல் வெறும் 39,648 ( எக்ஸ் ஷோரூம் ) ரூபாய் விலையில் விற்பனை செய்வதை பார்க்கும் போது முற்றிலும் இளைய தலைமுறை வாடிக்கையாளர்களை கவர முயற்சிப்பதை உணர்ந்து கொள்ள முடியும். ஹோண்டா நவியின் என்ஜின், ஆக்டிவாவில் பயன்படுத்தப்பட்ட அதே 110சிசி யூனிட் அதிகபட்சமாக 8 பிஸ் பவரையும் 91என்எம் டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. 60 கிமீ மைலேஜ் கொடுக்கும் இந்த மாடலில் வெறும் 3.8 லிட்டர் எரிபொருள் டேங்க் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.

honda-navi-2016-view-yenthiran

தற்போது 10 நகரங்களில் மட்டுமே கிடைக்கும் இந்த மாடல் விரைவில் அனைத்து நகரங்களிலும் அறிமுகம் செய்யப்படும் போது விற்பனை மேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.