சுஸுகி கிக்ஸர் SP மற்றும் SF வேரியன்ட்டுகள் இந்தியாவில் அறிமுகம்!!!
சுஸுகி நிறுவனம் ஏற்கனவே விற்பனையில் உள்ள கிக்ஸர் மாடலில் இரண்டு புதிய வேரியன்டுகளாக சுஸுகி கிக்ஸர் எஸ்பி மற்றும் கிக்ஸர் எஸ்எஃப் எஸ்பி ஆகியவற்றை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. எஸ்பி வேரியன்ட் 80,726 ரூபாய்(எக்ஸ் ஷோரூம்) மற்றும் எஸ்எஃப் எஸ்பி வேரியன்ட் 88,587 ரூபாய்(எக்ஸ் ஷோரூம்) விலையிலும் விற்பனைக்கு வந்துள்ளது.
இந்த இரண்டு வேரியன்டுகளும் ஸ்டான்டர்டு வேரியன்டிலிருந்து வேறுபடுத்தும் பொருட்டு புதிய ரேஸ் பாடி கிராபிக்ஸ்களுடன் எஸ்பி பேட்ஜூம் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் கலவையான கருப்பு வண்ணத்திற்கு பதிலாக மெரூன் வண்ணத்தில் இருக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன. பின்புறத்தில் எல்இடி லென்ஸ் கொண்ட டேன்ஜர் விளக்கு பொருத்தப்பட்டுள்ளது சிறப்பான ஃபினிசிங்கை கொடுக்கிறது.
அறிமுக விழாவில் மேலாண்மை இயக்குநர் திரு சாதோஸி பேசுகையில், இந்தியாவில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ள கிக்ஸர் மாடலின் புதிய வேரியன்டுகளாக எஸ்பி மற்றும் எஸ்எஃப் எஸ்பி ஆகிய மாடல்களை அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சியடைகிறோம். கிக்ஸரின் ஸ்ட்ரீட் ஸ்போர்ட்ஸ் பைக் என்ற பெருமையை தக்கவைத்து கொள்ளும் பொருட்டு இந்த மாடலின் செயல்திறன் மற்றும் தோற்றம் ஆகியவை மேம்படுத்தப்பட்டுள்ளன. இந்த புதிய எடிசன்கள் இந்திய இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் எனவும் தெரிவித்தார்.

கிக்ஸர் SP மற்றும் கிக்ஸர் SF மாடல்கள் மேட் ஃபேப்ராய்ன் க்ரே(Matt Fibroin Grey) மற்றும் க்ளாஸ் ஸ்பார்க்கிள் ப்ளாக் (Glass Sparkle Black ) ஆகிய இரண்டு வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்த இரண்டு மாடல்களும்
டிஸ்க் பிரேக் வசதியுடன் மட்டுமே கிடைக்கின்றது.
புதிய பாடி கிராபிக்ஸ் மற்றும் வண்ணங்களை தவிர என்ஜின் மற்றும் இதர பாகங்களில் எந்தவிதமான மாறுதல்களும் செய்யப்படவில்லை. மேலும் இதேபோல் கிக்ஸர் எஸ்எஃப் ஃப்யூல் இன்ஜக்சன் மாடலும் மோட்டோ ஜிபி எடிசன் வண்ணத்தில் குறிப்பிட்ட சில நகரங்களில் உள்ள டீலர்ஷிப்களில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
