ஒரு கோடி வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்ற சிபிஎஸ் டெக்னாலஜி!!

ஹோண்டா நிறுவனம் சிபிஎஸ் வித் ஈக்வலைஸர் தொழில்நுட்பத்தை தனது ஐந்து ஸ்கூட்டர்கள் மற்றும் நான்கு மோட்டோர்சைக்கிள்களில் உபயோகப்படுத்தி வருகிறது. இந்த தொழில்நுட்பமானது கடந்த 2009 ஆம் ஆண்டு ஹோண்டா நிறுவனத்தால் முதன் முதலாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இந்த தொழில்நுட்பத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ளது இந்நிறுவனத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

மேலும் இந்த வசதி கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக(!) ஐரோப்பிய நாடுகளில் நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தியாவில் ஏறத்தாழ ஒரு கோடி வாடிக்கையாளர்கள் இதொழில்நுட்பத்தை உபயோகப்படுத்தி வருகின்றனர்.

ஹோண்டா மோட்டார்ஸின் நிர்வாக இயக்குநர் திரு. கேய்ட்தா மரமட்சு கூறுகையில், ஹோண்டா நிறுவனம் புதிய தொழில்நுட்பங்களையும் வசதிகளையும் அறிமுகப்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. ஹோண்டா தான் உலகிலேயே முதன்முறையாக ட்யுவல் கிளட்ச் ட்ரான்ஸ்மிஸன், தயாரிப்பு நிலை வாகனங்களில் ஏர்பேக்குகள், ஈடில் ஸ்டாப் சிஸ்டம் போன்ற வசதிகளை 15 வருடங்களுக்கு முன்னரே அறிமுகப்படுத்தியது. அதே போல் சமீபத்தில் ஹோண்டா எக்கோ டெக்னாலஜி, சிஎல்ஐசி மெக்கானிசம் போன்ற புதிய வசதிகளை கண்டுபிடித்துள்ளது. வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் புதிய தொழில்நுட்பங்களை கொண்டு சேர்ப்பதே எங்கள் குறிக்கோள் என்று தெரிவித்துள்ளார்.

honda-cbs-technology-yenthiran-news

இந்த சிபிஎஸ் தொழில்நுட்பமானது, நாம் பின்புற பிரேக்கை அழுத்தும் போது முன்புற பிரேக்கும் இயங்க ஆரம்பித்துவிடும் இதன்மூலம் இருபுறங்களிலும் சமமான  அழுத்தம் பரவும்போது பைக் சீரான வேகத்தில் நிறுத்தப்படும். இதனால் பைக் மிகக்குறைந்த தூரத்திலேயே நிறுத்தப்படுவதுடன் நிலைதன்மையும் உறுதிப்படுத்தபடும்.

ஹோண்டா நிறுவனம் தற்போது தனது ஸ்கூட்டர் மாடல்களான  ஏக்டிவா 3ஜி, ஏக்டிவா ஐ, டியோ, ஏவியேட்டர் மற்றும் ஏக்டிவா 125 ஆகியவற்றிலும் மோட்டார்சைக்கிள் மாடல்களான சிபி சைன், சிபி சைன் எஸ்பி, சிபி யூனிகார்ன் 160, சிபி ஹார்னட் 160ஆர் ஆகியவற்றிலும் இந்த சிபிஎஸ் தொழில்நுட்பத்தை உபயோகப்படுத்தியுள்ளது.