ஹார்லி டேவிட்சன் ரோட்ஸ்டர் ஆன் தி வே! வெல்கம் டு இந்தியா!!!

ஹார்லி டேவிட்சன் தனது ஸ்போர்ட்ஸ்டர் ரேன்ஜ் மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் நோக்கில் புதிய ரோட்ஸ்டர் மாடலை வரும் நவம்பரில் விற்பனைக்கு கொண்டுவர உள்ளது. இந்த புதிய ரோட்ஸ்டர் ஏறத்தாழ 1௦,௦௦,௦௦௦ ரூபாய்(எக்ஸ் ஷோரூம்) விலையில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹார்லி டேவிட்சன், இந்தியாவில் தனது போர்ட்ஃபோலியோ எண்ணிக்கையை உயர்த்தும் வகையில் புதிய மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த ரோட்ஸ்டர் நவம்பர் வாக்கில் இந்திய சாலைகளில் பறக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்போர்ட்ஸ்டர் குடும்பத்தை சேர்ந்த இந்த மாடல் இந்த வருடத்தின் இரண்டாவது மாடலாக அறிமுகமாக உள்ளது. மேலும் இந்த மாடல் கடந்த ஏப்ரல் மாதமே உலகம் முழுவதிலும் விற்பனைக்கு வந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த மாடல் இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் அசம்பிள் செய்யப்படுவதால் விலை பத்து லட்சத்தை மட்டுமே நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் விற்பனைக்கு வந்த மாடலான புதிய ஸ்போர்ட்ஸ்டர் 1200 மற்றும் ஃபார்டீ எயீட்(Forty Eight) மாடல்களை அடிப்படையாக கொண்டு மெருகேற்றப்பட்டுள்ளது. எனவே நிச்சயம் சிறப்பான தோற்றத்தை கொண்டிருக்கும் என நம்பலாம். குறிப்பாக இரட்டை குழல் புகைப்போக்கி, ஒயிலான ஹேண்டில்பார்கள், கட்டையான அடர்த்தியான மட்கார்டுகள் போன்றவை கம்பீரமான தோற்றதை கொடுகின்றன.

harley-davidson-forty-eight

இருக்கையின் உயரம் குறைக்கப்பட்டு மிகக்குறைவாக 785மிமீ ஆக கொடுக்கப்பட்டுள்ளது ஓட்டுவதற்கு எளிதாக இருக்கும். மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில் முன்புறத்தில் 43மிமீ யூஎஸ்டி ஃபோர்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் இருக்கை உயரம் குறைவாகவும் ஹேன்டில்பார்கள் சற்றே உயரமாகவும் இருக்கும். இந்த உயரமான ஃபோர்க் அமைப்பு நிச்சயம் ஸ்மூத்தான ஒட்டுதல் தரத்தை கொடுக்கும் என ஹார்லி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே சமயம் பின்புறமும் 3.2 இன்ச் அளவுள்ள ட்வின் ஷாக் சஸ்ப்பேன்சர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த புதிய ரோட்ஸ்டர் என்ஜினில் எந்த மாற்றமும் இல்லாமல் ஃபார்டீ எயீட்(Forty Eight) மாடலில் உள்ள அதே 1200 சிசி வி-ட்வின் என்ஜின், 3750 ஆர்பிஎம் ல் உட்சபட்சமாக 103என்எம் டார்க்கை வாரி வழங்கும் வல்லமை கொண்டது. மேலும் இருபுறமும் டிஸ்க் பிரேக்குகளையும் குறிப்பாக ஏபிஎஸ் வசதியும் நிரந்தர அம்சங்களாக கொடுக்கப்பட்டுள்ளது.