ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் விலை உயர்கிறது!
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது அனைத்து ரக வாகனங்களுக்கும் ரூபாய் 1,100 முதல் 3,600 வரை விலை உயர்த்தியுள்ளது. ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்தியாவில் மிகப்பெரிய வாடிக்கையாளர் வட்டத்தை கொண்டுள்ளது. மேலும் ராயல் என்பீல்டு தனது தனித்துவமான டிசைனால் மதிப்பு மிக்க பிராண்டாக நூற்றாண்டை கடந்து வெற்றி நடை போடுகிறது.
இந்நிறுவனம் முதல் முதலில் 1901 ஆம் ஆண்டு பைக் தயாரிப்பில் இறங்கியது. இந்தியாவில் 1955 ஆம் ஆண்டு விற்பனையை தொடங்கியது. அன்று முதல் இன்று வரை எந்த ஒரு பெரிய டிசைன் மற்றத்தையும் பெறவில்லை, வசதிகள் மட்டுமே மேம்படுத்தப்பாட்டு வந்திருக்கின்றன. நம்மூரில் புகழ் பெற்ற என்ஃபீல்டு புல்லட்டில் தொடங்கிய வெற்றி தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட ஹிமாலயன், தண்டர்பேர்டு, கான்டினன் டல் GT வரை தொடர்கிறது.
இந்த விலை உயர்விற்கு என்ஃபீல்டு நிறுவனம் எந்தவொரு காரணத்தையும் தெரிவிக்கவில்லை. இந்த விலை உயர்வில் குறைந்தபட்சமாக ஹிமாலயன் மாடல் ரூ 1,100 மட்டுமே உயர்த்தப்படுகிறது. தற்போது ஹிமாலயன் ரூ 1,56,331 (எக்ஸ் – ஷோரூம்) விலையில் விற்பனையாகிறது.அதே சமயம் கிளாசிக் 500 குரோம் மாடல் கிட்டத்தட்ட 3,600 ரூபாய் உயர்கிறது. தற்போது இந்த மாடல் 1,78,058 (எக்ஸ் – ஷோரூம்) விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
ராயல் என்ஃபீல்டு மாடல்களுக்கான டிமாண்ட் அதிகமாக உள்ள நிலையில் டெல்லிலேயே காத்திருப்பு 1 முதல் 2 மாதங்களாக உள்ளது. மற்ற நகரங்களில் இது இன்னும் அதிகம். இதில் புல்லட் 350, மற்றும் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மாடல்களை குறிப்பிட்டு சொல்லலாம். விலை உயர்வு இந்நிறுவனத்திற்கு புதிய செய்தி இல்லை, ஏற்கனவே ஒரே வருடத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை விலையை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.
புதிய விலைப்பட்டியல் இதோ!
| ரகங்கள் | விலை(ரூபாயில்) |
|---|---|
| புல்லட் 350 | 1,09,392 |
| புல்லட் எலெகட்ரா 350 | 1,23,469 |
| புல்லட் 500 | 1,57,647 |
| கிளாசிக் 350 | 1,31,368 |
| கிளாசிக் 500 | 1,67,533 |
| கிளாசிக் 500 டெஸ்ர்ட் ஸ்ட்ரோம் | 1,70,307 |
| கிளாசிக் 500 குரோம் | 1,78,058 |
| தண்டர்பேர்டு 350 | 1,41,706 |
| கான்டினன் டல் GT | 1,98,699 |
| ஹிமாலயன் | 1,56,331 |
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350, விலை, மைலேஜ், வேரியண்ட் மற்றும் தொழில்நுட்ப விவரங்கள்
