வெறும் 20 நிமிட சார்ஜிங்கில் 480 கி.மீ ஓட்டலாம், வேற லெவல் மைலேஜ்!

வாகன உற்பத்தி நிறுவனங்கள் அனைத்தும் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் களம் இறங்கியுள்ளன. எலக்ட்ரிக் வாகனங்களை உபயோகிக்கும் போது சுற்றுச்சூழல் மாசுபடுதலை வெகுவாக குறைக்க முடியும். பெட்ரோல் மற்றும் டீசலுக்கு மாற்றாக மின்சக்தியால் இயங்கும் வாகனங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கும் அத்தனை நிறுவனங்களுக்கும் மிகப்பெரிய சவாலாக இருப்பது சார்ஜிங் செய்ய வாகனம் எடுத்துக்கொள்ளும் நேர அளவு ஆகும். ஏனென்றால் பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் இவைகளை நிறப்ப சில நிமிடங்களே தேவைப்படும். சார்ஜிங் செய்ய 5-6 மணி நேரம் என்றால் பாதி நாள் முழுவதும் சார்ஜிங் செய்ய செலவாகிவிடும், மிகவும் அவசர கால கட்டத்தில் வாகனங்களை பயன்படுத்த முடியாமல் போகலாம்.

எனவே குறைந்த நேரத்தில் விரைவாகவும், முழுமையாகவும் சார்ஜிங் செய்ய பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் கை கொடுக்கிறது. இந்த தொழில்நுட்ப மேம்பாட்டில் ஆராய்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

லூசிட் என்ற நிறுவனம் “ஏர்“ என்ற ஈ.வி காரை அறிமுகம் செய்துள்ளது. இந்த காரின் இரட்டை எலக்ட்ரிக் மோட்டார்கள் 1080 குதிரைத்திறனை வெளிப்படுத்தும். இதில் உள்ள 113 கி.வாட் பேட்டரியை வெறும் 20 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் போதும் 480 கி.மீ தூரம் வரை பயணிக்கலாம். முழு சார்ஜில் 832 கி.மீ மைலேஜ் தரும். இதன் மைலேஜ் வேற லெவலில் உள்ளது.

மிகவும் அதிநவீன வசதிகள் கொண்ட சொகுசு காரான இது டெஸ்லா கார்களுக்கு மிகவும் கடுமையான போட்டியாக இருக்கும். இது விரைவில் விற்பனைக்கு வரும் என லூசிட் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இதன் விலை கோடிகளில் நிர்ணயம் செய்யப்படும்.