விற்பனையை தொடங்கி ஒரே ஆண்டில் 1 லட்சம் செல்டோஸ் கார்களை விற்ற கியா நிறுவனம்
தென்கொரியாவை தலைமை இடமாகக் கொண்ட கியா நிறுவனம் 2019 ஜுலை மாதத்தில் இந்தியாவில் கால் பதித்தது. கியா நிறுவனம் தனது முதல் கார் மாடலான செல்டோஸ் கடந்த 2019 ஆகஸ்டு அன்று விற்பனைக்கு அறிமுகம் செய்தது, பின்பு கார்னிவல் மாடலை அறிமுகம் செய்தது.
2019 ஆகஸ்டு முதல் இந்த ஆண்டு 2020 மார்ச் வரை 75,000 கார்களை விற்றது, ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நேரத்தில் விற்பனையை நன்கு முடுக்கிவிட்டது.
இந்த காரை வாங்கினதுக்கு பேசாம ஒரு கழுதையை வாங்கி இருக்கலாம்! வாடிக்கையாளரின் கோபம்!!
இதன் விளைவாக தற்போதய நிலவரப்படி 1 லட்சம் கார்களை விற்று புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாக கியா நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் 97,745 கார்கள் செல்டோஸ் மாடல் கார்கள் ஆகும், கார்னிவல் மாடலில் 3614 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் விற்பனையை தொடங்கி ஓராண்டு ஆன நிலையில் 1 லட்சம் கார்களை விற்பனை செய்திருப்பதால் அந்நிறுவனம் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளது, மேலும் புதிய மாடல் கார்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. தற்போது கியா சோனட் மாடல் காரின் விற்பனைக்காக பலரும் காத்திருக்கின்றனர். கியா சோனட் கார் வருகிற 2020 செப்டம்பர் 18 அன்று விற்பனைக்கு வரும்.
கடந்த பதிவில் செல்டோஸ் காரில் ஏற்பட்ட பிரட்சனையால் காரை வாங்கிய வாடிக்கையாளரின் செயலை பதிவிட்டிருந்தோம், கியா நிறுவனத்தின் விற்பனைக்கு பிந்தைய சேவையில் தகுந்த மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பதே வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு.


