ஒரே நாளில் 1000 பைக்குகளை விற்ற ராயல் என்பீல்டு நிறுவனம்

கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு நிறுவனங்கள் தங்கள் வாகனங்களை போட்டி போட்டுக்கொண்டு விற்பனை செய்துவருகிறது. ஓணம் பண்டிகை நாளில் கேரள மக்கள் புதிய பொருட்களை வாங்க ஆர்வம் காட்டுவர்.

இந்த ஓணம் பண்டிகையை முன்னிட்டு ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனை பணிகளை திறம்பட செய்து 1000 பைக்குகளை விற்பனை செய்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்நிறுவனம் இந்தியவில் உள்ள பல டீலர்ஷிப் கடைகளை மூடியது, இப்போது உள்ள தளர்வுகளால் மீண்டும் விற்பனையை ஊக்கப்படுத்த பல சலுகைகளை அறிவித்துள்ளது.

பிரபலமான புல்லட் 350, கிளாசிக் 350, ஹிமாலயன் ஆகிய மாடல்கள் கேரளாவில் நன்கு விற்பனையானது. ராயல் என்பீல்டு நிறுவனம் நிதி நெருக்கடியை சமாளித்து நல்ல இலாபம் ஈட்ட இந்தியா முழுவதும் விற்பனை பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் புதிய அப்டேட்டுகளையும் தொடர்ந்து வெளியிட்டுக்கொண்டிருக்கிறது. பழைய மாடல் பைக்குகளை எக்ஸ்-ஜேன்ச் செய்துகொள்கிறது.

இந்நிறுவனம் தற்கால இளைஞர்கள் மற்றும் பைக் பிரியர்கள் விரும்பும் வகையில் புதிய மாடல் பைக்குகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. வரும் மாதங்களில் 650சி.சி கொண்ட மீட்டியோர் 350 என்ற புதிய மாடல் பைக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் எனவும், பல்வேறு புதிய சலுகைகளை அளிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.