மஹிந்திரா தார் 2020 புதிய வசதிகளுடன் அறிமுகம்!

மஹிந்திரா நிறுவனம் தார் எஸ்.யூ.வி மாடலில் புதிய வடிவமைப்புகள் செய்து, புதிய அம்சங்களை சேர்த்து விற்பனை செய்ய உள்ளது, இது AX, LX என இரண்டு வேரியண்டுகளில், 6 நிறத்தேர்வுகளில்  கிடைக்கிறது.

இந்த மாடல் இரு இன்ஜின் தேர்வுகளில் வருகிறது:
1. 2 லி T-GDi mStallion பெட்ரோல் இன்ஜின் – 150 பி.ஹச்.பி பவர், 320 நீ/மீ  டார்க்
2. 2.2 லி mHawk டீசல் இன்ஜின் – 130 பி.ஹச்.பி பவர், 300 நீ/மீ டார்க்

டிரான்ஸ்மிஷன்: 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன்(அ) 6-ஸ்பீடு டார்க்-கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்

புதிய அம்சங்கள்:
முன்பகுதியில் புதிய கிரில் மற்றும் முகப்பு விளக்குகள், 18 இன்ச் வீல்கள், டெயில் விளக்குகள், மேற்கூரை – ஹார்டு-டாப், ஃசாப்ட்-டாப், மாற்றியமைக்கக்கூடிய டாப், 7-இன்ச் டச்-ஸ்கீரின் இன்போடைன்மென்ட் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல், ஸ்டியரிங்கில் கன்ட்ரோல்கள் பொருத்தப்பட்டுள்ளன, மேற்பகுதியில் ஸ்பீக்கர்கள் ஆகிய புதிய அம்சங்கள் உள்ளன.

இந்த மாடலின் விற்பனை மஹிந்திரா நிறுவனத்தின் நிறுவனர்கள் தினமான அக்டோபர் 2-ம் தேதி அன்று தொடங்கும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.