ரூ.7 லட்சம் விலையில் ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் ஃபேளர் மாடல் கார் இந்தியாவில் அறிமுகம்

ஃபோர்டு நிறுவனம் ரூ.7 லட்சம் விலையில் ஃப்ரீஸ்டைல் ஃபேளர் மாடல் காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த கார் புதிய அம்சங்களுடன் டாப் வேரியண்ட் காராக உள்ளது, இந்த மாடல் கார் பெட்ரோல், டீசல் தேர்வுகளில் கிடைக்கிறது.

ஃபோர்டு நிறுவனம் ஜியோ நிறுவனத்துடன் போட்டுள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த காரை வாங்குபவர்களுக்கு ஜியோ-சவான் மியூசிக் அப்ளிகேஷனுக்கான 1 வருட விளம்பரம் இல்லா பிரீமியம் சப்ஸ்கிரிப்ஷன் முற்றிலும் இலவசமாக கிடைக்கிறது. இந்த ஆஃப்பர் 2021 பிப்ரவரி மாதத்துக்குள் காரை வாங்குபவர்களுக்கு மட்டுமே.

இந்த கார் ஏ.பி.டி, ஏ.பி.எஸ், 7-இன்ச் டச்-ஸ்கிரீன் இன்போடைன்மென்ட் சிஸ்டம், ஃபோர்டுபாஸ் ஆப், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா & சென்சார்கள், ஆட்டோமேட்டிக் முகப்பு விளக்குகள் மற்றும் வைப்பர்ஸ், கிளைமெட் கன்ட்ரோல், ஏ.சி போன்ற பல அம்சங்களுடன் வருகிறது.

ஹூண்டாய் வென்யூ, விலை, மைலேஜ், வேரியண்ட் மற்றும் தொழில்நுட்ப விவரங்கள்:

இதன் தோற்றமும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது, ஓ.வி.ஆர்.எம் மற்றும் ஃரூப் ரைல்ஸ் சிவப்பு நிறத்தில் உள்ளன, காரின் அப்ஹேல்ஸரி கருப்பு மற்றும் சாம்பல் (Grey) நிறத்தில் உள்ளது. இந்த கார் மூன்று கோல்டு வெள்ளை, டைமன்டு வெள்ளை, ஸ்மோக் சாம்பல் (Grey) ஆகிய மூன்று நிறங்களில் கிடைக்கிறது.

 

இன்ஜின் விவரம்:

விவரம் பெட்ரோல் மாடல் டீசல் மாடல்
இன்ஜின் வகை 1.2 லி, 3 சிலிண்டர் பி.எஸ்6 பெட்ரோல் இன்ஜின் 1.5 லி பி.எஸ்6 டீசல் இன்ஜின்
பவர் 95 பி.ஹச்.பி 99 பி.ஹச்.பி
டார்க் 120 என்.எம் 215 என்.எம்
டிரான்ஸ்மிஷன் 5-ஸ்பீடு மேனுவல் 5-ஸ்பீடு மேனுவல்

இந்த காரின் பெட்ரோல் வேரியன்ட் 19 கி.மீ/லி மைலேஜ், டீசல் வேரியன்ட் 24 கி.மீ/லி மைலேஜ் தரும். இந்த கார் ஹுண்டாய் i20, மாருதி எஸ்-கிராஸ் மாடல்களுக்கு சிறந்த போட்டியாக அமையும். இந்த கார் சென்னை எக்ஸ்-ஷோரூம் விலையான ரூ.7 லட்சத்திற்கு கிடைக்கிறது.

புக்கிங்: https://booking.india.ford.com