அதிக மைலேஜ் பெறுவதற்கான வழிமுறைகள்!!

மாத பட்ஜெட்டில் எரிபொருளுக்கு அதிக தொகையை செலவிடுவதை தவிர்ப்பதற்கு, சில எளிய வழிமுறைகளை கையாண்டால், கூடுதல் மைலேஜை பெற முடியும். இதன்மூலம், எரிபொருள் விலையேற்றத்தை செவ்வனே சமாளிக்கலாம்

நகர்ப்புறங்களில் ஓட்டுவோர் காரை வெடுக் வெடுக் என நகர்த்துவதை தவிர்க்க வேண்டும். மேலும், முன்னால் செல்லும் வாகனத்துடன் குறிப்பிட்ட இடைவெளி விட்டு செல்லும்போது எஞ்சினை வேகமாக இயக்குவதையும், திடீரென பிரேக் போட்டு நிறுத்தும் அவசியத்தை தவிர்க்கலாம்.சிக்னல்களில் 60 வினாடிகளுக்கு மேல் நிற்க வேண்டியிருந்தால் எஞ்சினை ஆஃப் செய்து வைக்கலாம். பல சிக்னல்களில் எத்தனை வினாடிகளில் சிக்னல் மாறும் என்பதை காட்டும் டைமர்கள் இருப்பது உங்கள் காரின் மைலேஜை அதிகரிக்க உதவும்.