கே.டி.எம் டியூக் 250 பி.எஸ்6 புதிய அம்சங்களுடன் அறிமுகம்!
பி.எஸ்6 விதிகளின்படி மேம்படுத்தப்பட்ட கே.டி.எம் டியூக் 250 பைக் புதிய அம்சங்களுடன் விற்பனைக்கு வந்துள்ளது.
இதன் 248 சி.சி, ஒற்றை சிலிண்டர், திரவ கூல்டு DOHC எஞ்சின் 29.6 பி.ஹச்.பி பவரையும், 24 என்.எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.
புதிய அம்சங்கள்:
இந்த பைக்கில் இரட்டை சேனல் ஏ.பி.எஸ் மற்றும் சூப்பர்மோட்டோ மோட் பின்புற ஏ.பி.எஸ்-ஐ ஆஃப், ஆன் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இரு புறமும் டிஸ்க் பிரேக்குகள், இருபுறமும் WP சஸ்பென்ஷன் அமைப்பையும் கொண்டுள்ளது.

புதிய எல்.இ.டி முகப்பு விளக்குகள், எல்.இ.டி பகல் நேர ரன்னிங் விளக்குகள், இரு நிறங்களில் பாடி கிரேஃபிக்ஸ் இந்த பைக்கிற்கு ஸ்போர்ட்டி மற்றும் கம்பீரமான தோற்றத்தை அளிக்கின்றன.

யமகா FZ-25 மற்றும் சுசூகி கிக்ஸர் 250 ஆகிய பைக்குகளுக்கு நேரடி போட்டியாக அமையும். இந்த பைக்கை ரூ. 2 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், சென்னை) விலையில் ஆன்லைன் மற்றும் டீலர்ஷிப் ஷோரூம்களில் புக்கிங் செய்யலாம்.
டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V ரேஸ் எடிசன், விலை, மைலேஜ், வேரியண்ட் மற்றும் தொழில்நுட்ப விவரங்கள்
