டாடா HBX மைக்ரோ எஸ்.யூ.வி விரைவில் அறிமுகம்
டாடா நிறுவனம் தனது மைக்ரோ எஸ்யுவி மாடல் காரை 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியது, இந்த மாடல் காம்பேக்டான நீளம் குறைவாக உள்ள எஸ்யுவி ஆகும்.
இதன் பி.எஸ்6, 1198 சி.சி, 1.2 லி, 3 சிலிண்டர் ரிவோட்ரான் இன்ஜின் 84.8 பி.ஹச்.பி பவரையும், 113 என்.எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்ட மேனுவல் (அ) ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளில் கிடைக்கிறது.
இதன் மேற்கூரையில் பொருட்களை வைத்து செல்லும் ஸ்டேன்ட் கொடுக்கப்பட்டுள்ளது, 7-இன்ச் டச்-ஸ்கிரீன் இன்போடைன்மென்ட் சிஸ்டம், ஹார்மன் ஆடியோ சிஸ்டம், ஏர்பேக்குகள் -2, ஏ.பி.எஸ் மற்றும் ஈ.பி.டி, பின்புற பார்க்கிங் சென்சார் மற்றும் கேமரா போன்ற ஏராளமான வசதிகள் உள்ளன.
ஹூண்டாய் வென்யூ, விலை, மைலேஜ், வேரியண்ட் மற்றும் தொழில்நுட்ப விவரங்கள்
இந்த மாடல் மஹிந்திரா KUV100 மற்றும் மாருதி சுசூகி இக்னிஸ் கார்களுக்கு சிறந்த போட்டியாக அமையும்.

இந்த ஆண்டு இறுதியில் ரூ. 5 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், சென்னை) விலையில் இந்த மாடல் விற்பனைக்கு வரும் என செய்திகள் வெளிவந்துள்ளன.

