மாருதி சுசுகி அப்டேட் எஸ்-கிராஸ் பெட்ரோல் இந்தியாவில் அறிமுகம்
மாருதி சுசுகி நிறுவனம் தனது காம்பேக்ட் எஸ்.யூ.வி செக்மென்டில் உள்ள எஸ் கிராஸ் பெட்ரோல் மாடல் புது அப்டேட் காரை தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
இந்த கார் 5 சீட்டுகள் கொண்ட காம்பேக்ட் எஸ்.யூ.வி ஆகும். இந்த கார் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளுடன் மொத்தம் 7 வேரியண்ட்டுகளில், 5 நிறங்களில் கிடைக்கிறது.
SHVS ஹைபிரிட் தொழில்நுட்பத்தால் ஆன பி.எஸ்6, 1462 சி.சி, 1.5 லி K15B பெட்ரோல் என்ஜின் ஆனது 103 பி.ஹச்.பி பவரையும், 138 என்.எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்சின் குறைந்த அளவு பெட்ரோலை உபயோகித்து இயங்கும், இதனால் நல்ல மைலேஜ் கிடைக்கும். ARAI சான்று படி 18.43 கி.மீ/லி மைலேஜ் தரும்.

சிறப்பம்சங்கள்:
எல் இ டி பகல் நேர ரன்னிங் விளக்குகள், ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள், எல்இடி டெயில் விளக்குகள், குரூஸ் கன்ட்ரோல், கிளைமேட் கன்ட்ரோல், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ மூலம் போனுடன் இணைக்கும் வசதி, டிரைவர் சீட்டை மாற்றியமைத்துக் கொள்ளும் வசதி மற்றும் பல வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு:
ஈபிஎஸ் (எலக்ட்ரானிக் பிரேக் போர்ஸ் டிஸ்ட்ரிபியூஷன்) உடன் கூடிய ஏபிஎஸ் (ஆன்ட்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம்), பின்புற பார்க்கிங் கேமரா மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், முன்பகுதியில் இரண்டு டிரைவர் ஏர்பேக்குகள், சீட்பெல்ட் வார்னிங், ISOFIX குழந்தைகள் பாதுகாப்பு வசதி போன்ற பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது.
மாருதி சுசுகி எஸ்-கிராஸ், ரெனால்ட் டஸ்டர், ஹுயூண்டாய் கிரிட்டா மற்றும் கியா செல்டேஸ் மாடல்களுக்கு சிறந்த போட்டியாக அமையும்.
வேரியன்ட் மற்றும் விலை(எக்ஸ்-ஷோரூம், சென்னை) விவரம்:
| வேரியன்ட் | விலை |
|---|---|
| மாருதி எஸ்-கிராஸ் சிக்ஃமா | ரூ. 8.39 லட்சம் |
| மாருதி எஸ்-கிராஸ் டெல்டா | ரூ. 9.6 லட்சம் |
| மாருதி எஸ்-கிராஸ் ஃசீட்டா | ரூ. 9.95 லட்சம் |
| மாருதி எஸ்-கிராஸ் ஆல்ஃபா | ரூ. 11.15 லட்சம் |
| மாருதி எஸ்-கிராஸ் டெல்டா AT | ரூ. 10.83 லட்சம் |
| மாருதி எஸ்-கிராஸ் ஃசீட்டா AT | ரூ. 11.18 லட்சம் |
| மாருதி எஸ்-கிராஸ் ஆல்ஃபா AT | ரூ. 12.39 லட்சம் |
