புது பைக் வாங்க போறீங்களா ? இதோ உங்களுக்கான செக்லிஸ்ட் !!
புது வாகனம் வாங்குவது எல்லோருக்குமே ஓர் இனிய அனுபவம். ஆனால் சிலருக்கோ அதுவே மிக மோசமான அனுபவமாக அமைந்து விடுகின்றது, அத்தகைய சூழ்நிலைகளை தவிர்க்க இதோ சில குறிப்புகள்!
வாகனம் வாங்க உகந்த நாள், தேதியை முதலிலேயே முடிவு செய்து கொள்ளுங்கள்.
டெலிவரி நாளுக்கு சில தினகள் முன்பே டீலருக்கு போன் செய்து எல்லாம் சரியாக நடக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.உங்கள் வீட்டில் நல்ல நாள் கெட்ட நாள், அஷ்டமி நவமி பார்ப்பதாக இருந்தால் அதைப்பொறுத்து வாகனம் வாங்க உகந்த நாள் தேதியை முன்னரோ பின்னரோ மாற்றிவிட்டு டீலருக்கு தெரிவித்து விடுங்கள்
டெலிவரி எடுக்கும் போது மறவாமல் உங்களுடன் வாகனங்களைப் பற்றி அனுபவம் உள்ளவரை அழைத்து செல்லுங்கள். நீங்கள் வாங்கவிருக்கும் வாகனத்தை அவரிடம் காட்டி எல்லாம் சரியாக உள்ளதா என்று பரிசோதித்து பார்க்க சொல்லவும்.
உங்கள் வாகனத்தை டெலிவரி எடுக்கும் போது பகலில் செல்வது உத்தமம். வாகனத்தின் நிறம் மற்றும் மற்ற பாகங்கள் சரியாக உள்ளதா என பார்க்க உதவும். மேலும் ஒலிபெருக்கி, பகல் விளக்குகள், முகப்பு விளக்குகள், இன்டிகேட்டர், பேட்டரி போன்றவற்றை சரி பார்த்துக் கொள்ளுங்கள்.
முன் பணம் செலுத்தியிருந்தால் அந்த ரசீது மற்றும் மீதித் தொகையைச் சரிபார்த்து எடுத்துச் செல்லுங்கள். வாகன கடன் பெற்று இருந்தால் அனைத்து பேப்பர்களையும் சரி பார்த்து கை எழுத்து போடுங்கள். லோன் நம்பர், இன்சூரன்ஸ், ரெஜிஸ்ட்ரேசன் என அனைத்தையும் சரிபார்த்து கொள்ளுங்கள்.
வாகனத்தை எடுத்தவுடன் எத்தனை கிமீ ஓடி இருக்கிறது என்பதை கவனியுங்கள். 5-10 கிமீ என்றால் ஓகே. ஆனால் அதற்கு மேற்படி இருந்தால் காரணத்தை கேட்டு தெளிவு படுத்திக்கொள்ளுங்கள்.
கார் வாங்கப் போறீங்களா? அப்போ உங்க ராசிக்கு ஏற்ற கலர் என்னன்னு தெரிஞ்சுக்கங்க..
பைக்கை ஸ்டார்ட் செய்து ஒரு நிமிடம் பாருங்கள், ஏதேனும் அப்நார்மல் புகை வருகிறதா என்பதை கவனிக்கவும், இப்போது உங்கள் வண்டியை ஓட்டிப் பாருங்கள். மிதமான மற்றும் சற்று கூடுதல் வேகத்தில் ஒட்டும் போது ஏதேனும் தேவையில்லாத அதிர்வுகள் மற்றும் சத்தம் வருகிறதா? என்று சோதித்து கொள்ளுங்கள்.
கடைசியாக, எக்ஸ்ட்ரா பிட்டிங், க்ரேஸ் கார்டு, ஆலாய், பூட் ரெஸ்ட் போன்றவற்றை ஒருமுறை சரிபார்த்துக் பிறகே டெலிவரி எடுங்கள்.
