சுஸூகி ஜீஎஸ்எக்ஸ் ஆர்250 பேட்டன்ட் படங்கள் இணைய தளத்தில் வெளியானது!!

சுஸூகி  ஜீஎஸ்எக்ஸ்  ஆர்250  பேட்டன்ட்  படங்கள்  மோட்டார்சைக்கிள்  ந்யூஸ்   இணைய தளத்தில்  வெளியாகி  உள்ளது.  மேலும்  இது  கிக்ஸர்  மாடல் போன்றே  காட்சியளிக்கிறது.

இந்த  மாடல்  கடந்த  2015 ஆம்  ஆண்டு  இது  போன்ற  ஒரு  மாடலை  சுஸூகி நிறுவனம் தயாரிக்க  திட்டமிடப்பட்டுள்ளதாக  செய்திகள்  வெளியானது,  பிறகு  அதைபற்றி  பேச்சே  அடிபடாத  நிலையில்  குறிப்பிட்ட  உற்பத்தி நிலை மாடல்  பேட்டன்ட்  வெளியாகி  உள்ளது.  படங்களை  பார்க்கும்  போது  அதன் பங்காளியான  ஜீஎஸ்எக்ஸ்  ஆர்1000  இன் சாயல்  தெரிகிரது.  எனவே நிச்சயமாக  இளைய  தலைமுறையினருக்கான   மாடலாக  வெளிவரும் என்று  எதிர்பார்க்கலாம்.

என்ஜின்  பற்றிய  விவரங்கள்  தெரியாத  நிலையில்  இம்மாடல்  250 சிசி திறன்கொண்ட,  சிங்கிள்  சிலின்டர்  மற்றும்  லிக்விட்  கூல்ட்   மோட்டாருடன் உச்சபட்ச்சமாக  25 பிஎஸ் பவரை  வெளிப்படுத்தும்  திறன்  கொண்டதாக இருக்கலாம்  என  யூகிக்கபடுகிறது.  மேலும்  ஸ்போர்ட்ஸ்  பைக்குகளின் சாயல்  உள்ளதால்  நெடுஞ்சாலை  பயணங்களுக்கு  உகந்ததாக  இருக்கும்.

இந்தாண்டு  இறுதியில்  அதிகாரப்பூர்வமாக  விற்பனைக்கு  வரலாம்  எனவும், இந்தியாவில்  அடுத்த  வருடத்  தொடக்கத்தில்  விற்பனைக்கு  வரலாம் என்றும்  பேச்சு  அடிபடுகிறது.