ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350 – புதிய சைலன்ஸர்கள் அறிமுகம்

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பைக்குகளை தங்களுக்கு ஏற்றாற்போல் வடிவமைத்துக் கொள்ளும்  வசதியை  தருவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது அதன் முதற்கட்டமாக ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350  மாடலுக்கான சைலன்ஸர்களை கஸ்டமைஸ் செய்து விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

வரும் காலத்தில் இவ்வாறு மாற்றங்கள் செய்யும் பொழுது ஒவ்வொரு வாகனமும் தனித்துவமாகத் தெரிய உதிரிபாகங்களை ராயல் என்ஃபீல்டு நிறுவனமே தயாரிக்கும்.

ராயல் என்ஃபீல்டுக்கான சிறந்த ஆக்சஸரீஸ்கள் இதோ!

தற்பொழுது ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கிளாசிக் 350 மாடலுக்கு தனியாக வடிவமைக்கப்பட்ட 16 வகை சைலன்ஸர்களை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

இந்த சைலன்ஸர் சில்வர் மற்றும் குரோமியம் உலோகங்களால் செய்யப்பட்டுள்ளன. இவை நேராக உள்ள புகை வெளியிடும் பகுதி, சாய்வாக உள்ள புகை வெளியிடும் பகுதி, சிறியதாக உள்ள புகை வெளியிடும் பகுதி என 3 ஸ்டைலில் கிடைக்கிறது.

இதன் விலை ரூ.3300- ரூ.3600 வரை.

இதனை ஆன்லைனில் ஆர்டர் செய்து அருகில் உள்ள ஷோரூம்கள் அல்லது டீலர்ஷிப் கடைகளில் சென்று பொருத்திக்கொள்ள வேண்டும்.

சிறந்த மைலேஜ் தரும் BS6 பைக்குகள் 2020! லிஸ்ட்ல உங்க பைக் இருக்கா?